Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 09, 2011

யு எஸ் சில் சந்தி சிரிக்கும் இந்திய மருத்துவத்துறை !!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவ காப்பீட்டில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக 9 இந்திய மருத்துவத் துறையினர் உள்பட 90 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 1,320 கோடிக்கு மேலாக மருத்துவ காப்பீட்டு ஊழல் புரிந்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தவறான சான்றிதழ் மூலம் மருத்துவ காப்பீட்டை இவர்கள் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 8 நகரங்களில் இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டதில் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரி செலுத்தும் மக்களின் பணத்தை இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தியதாக நீதிபதிகள் தெரிவித்தனர்., சிகாகோவில் கிளினிக் நடத்தி வந்த நீலேஷ் படேல் மீதும் டெட்ராய்ட் நகரில் ரெஹான், தெüசிப் மான், ஜானகி செட்டியார், ஜிகார் படேல், ஹேதல் பரோட், சீனிவாஸ் ரெட்டி , ராம் சந்த் ராம்ரூப் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள 90 பேரின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மருத்துவ திட்டத்தில் முறைகேடு செய்தல், அன்னியச் செலாவணி மோசடி உள்ளிட்ட வழக்குகளும் போடப்பட்டுள்ளன.

பல்வேறு மருத்துவ திட்டங்களுக்கு செலவிட்டதாக மருத்துவக் காப்பீடு மூலம் இவர்கள் பணம் பெற்றுள்ளனர். தெரபி, மனநலம் சார்ந்த சிகிச்சை, சைக்கோ தெரபி, மருத்துவ உபகரணங்கள் வாங்கியது உள்ளிட்டவை பெயரில் இவர்கள் பணம் பெற்றுள்ளனர்., டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவத் தொழில் சார்ந்தவர்கள் உள்ளிட்டோரும் இதில் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...