லண்டன்:கிழக்கு ஆப்ரிக்காவில் அடுத்த நான்கு மாதங்களுக்குள் ஏழு லட்சத்திற்கும் மேலானோர் மரணம் அடைய வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை ஐ.நா அறிவித்துள்ளது.
கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள பஞ்சத்தின் காரணமாக அவர்களுக்கு தகுந்த முதலுதவி கிடைக்கவில்லையென்றால் அடுத்த நான்கு மாதங்களுக்குள் லட்சக்கணக்கானோர் இறக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்ததோடு, இந்த பகுதியில் 12 மில்லியனுக்கும் மேற்ப்பட்டோர் உணவு தேவை உள்ளதாகவும், அதில் நான்கு மில்லியனுக்கும் மேலானோர் சோமாலியாவை சேர்ந்த மக்களே என்று பிரபல பத்திரிக்கை டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தை விட 66% அதிகரித்து உள்ளதாகவும், சோமாலியாவில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் இறக்கின்றனர், அதில் பாதிக்கும் மேற்ப்பட்டோர் குழந்தைகளே என்றும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது.
ஐ.நாவின் மனிதநேய அலுவகத்தின் துணை பொறுப்பாளர் மார்க் பௌடன் தெரிவிக்கையில், சோமாலியா நாட்டின் மொத்த மக்கள் தொகையில் அரை பகுதிக்கும் மேலான மக்கள் உதவி தேவைப் படுபவராக உள்ளனர் என்றும், உணவு பாதுகாப்பு தலைமை பொறுப்பில் உள்ள கிரைன்னி மொலோனி, இது முன்பு எப்போதும் காணாத அளவுக்கு மிக அதிக அளவில் பஞ்சம் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.
சோமாலியாவின் ஆறு பகுதிகளில் பஞ்சம் தாக்கியுள்ளது, இதில் சோமாலியாவின் தெற்கு பகுதியில் நான்கு பகுதிகளும், இரண்டு பகுதிகள் அகதிகளாக புகலிடம் தேடி வந்தோர் வசிக்கும் பகுதிகளாவும் உள்ளது. ஏற்க்கனவே பத்தாயிரத்திற்கும் மேலானோர் பஞ்சத்தாலும், பிரச்சினைகளாலும் மடிந்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...