Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 27, 2011

சௌதியில் வாக்களிக்கவும், தேர்தலில் நிற்கவும் பெண்களுக்கு உரிமை

சௌதியரேபியாவில் நகராட்சித் தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கவும், போட்டியிடவும் உரிமை வழங்கப்படவிருப்பதாக அந்நாட்டின் மன்னர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காகவுள்ள ஷூரா மன்றத்திற்கு நியமிக்கப்படுகின்ற உரிமையும் பெண்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மீறாத வகைகளில் பெண்களால் சமூகப் பங்களிப்பு செய்ய முடியும் என்றால், அதனை நாங்கள் தடுக்க மாட்டோம். அப்துல்லாமரபும் பழமைவாதமும் கடுமையாக பேணும் நாடான சௌதியரேபியாவில், பெண்களுக்கு கூடுதலான உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும் என நெடுங்காலமாக குரல்கொடுத்துவருகின்ற ஆர்வலர்கள் மன்னரின் இந்த அறிவிப்புகளைப் நிச்சயம் வரவேற்பார்கள்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என மன்னர் தெரிவித்துள்ளார்.

"இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மீறாத வகைகளில் பெண்களால் சமூகப் பங்களிப்பு செய்ய முடியும் என்றால், அதனை நாங்கள் தடுக்க மாட்டோம். பெண்களை ஒதுக்கிவைக்க மாட்டோம். ஆகவே மூத்த மதகுருக்களிடமும் மற்றவர்களிடமும் கலந்து ஆலோசித்து அடுத்த தடவையிலிருந்து பெண்களையும் ஷூரா மன்றத்தில் உறுப்பினராக்குவது என நாங்கள் முடிவெடுத்துள்ளோம்." என மன்னர் அப்துல்லா கூறினார்.

தவிர பெண்கள் நகராட்சித் தேர்தல்களில் வாக்களிக்கவும் தேர்தலில் போட்டியிடவும் பெண்களுக்கு உரிமை வழங்கப்படுகிறது என்று அவர் அறிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...