கெய்ரோ: எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை, கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டு சுற்றுச் சுவரைத் தகர்த்தனர். இந்தக் கலவரத்தில், மூன்று பேர் பலியாகியுள்ளனர். 500 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த மாதம் 18ம் தேதி, இஸ்ரேல்- எகிப்து எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், எகிப்து போலீசார் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதனால், கோபமடைந்த எகிப்து நாட்டின் கிளர்ச்சியாளர்கள், நேற்று முன்தினம், கெய்ரோவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை முற்றுகையிட்டனர். தூதரக அதிகாரிகளை, நாட்டை விட்டு ஓடும்படி வற்புறுத்தினர். தூதரகத்தின் சுற்றுச் சுவரை உடைத்து, உள்ளே நுழைந்த கிளர்ச்சியாளர்கள், தூதரகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை எரித்தும், கிழித்து எறிந்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். எகிப்து ராணுவத்தினரும், போலீசாரும் கவச வாகனங்களுடன் வந்து, கிளர்ச்சியாளர்களை அடித்து விரட்டினர். இந்தச் சம்பவத்தில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். 500 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டின் விமானப்படை விமானம் மூலம், தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் இஸ்ரேலுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...