சென்னை: ஆண்டுக்கணக்கில், அரியர்ஸ் வைத்துள்ள, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள், பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தேர்ச்சி பெற, அடுத்த ஆண்டு செப்டம்பர் தேர்வு வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது.
இந்த கால கட்டத்திற்குள் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்ற பாடங்கள் உட்பட அனைத்துப் பாடங்களுக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், புதிதாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்படும். பிளஸ் 1, பிளஸ் 2 தவிர, மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பு கல்வியாண்டில், சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்துள்ளன. பள்ளிகளில், 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், நேரடியாக சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் பொதுத் தேர்வு எழுதுவர்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி அமலானதன் காரணமாக, 10ம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தனித்தேர்வை, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 75 ஆயிரம் முதல், 90 ஆயிரம் பேர் வரை எழுதுகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் ஆண்டுக்கணக்கில், &'அரியர்ஸ்&' வைத்துள்ளனர். இதனால், தனித்தேர்வு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்த மாணவர்கள், 2012, செப்டம்பரில் நடைபெறும் தேர்வுக்குள், &'அரியர்ஸ்&' பேப்பரில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதாவது, தேர்வுத்துறை விதிமுறைப்படி, வரும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்வு மற்றும் அதன்பின் செப்டம்பரில் நடைபெறும் தனித்தேர்வு ஆகிய இரு தேர்வுகளில் மட்டுமே, பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுத முடியும்.
செப்டம்பர் 21 ம் தேதி துவங்கும் தனித்தேர்வை, பழைய பாடத் திட்டத்தின் கீழ் எழுதலாம். அதில், எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால், 2012 செப்டம்பருக்குள், தோல்வி அடைந்த பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை எனில், 2013 மார்ச்சில் நடைபெறும் தேர்வை, புதிய பாடத்திட்டத்தின் கீழ் எழுத வேண்டியிருக்கும். தேர்ச்சி அடைந்த பாடங்கள் உட்பட, ஐந்து பாடங்களுக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உள்ள பாடங்களின் அடிப்படையில் தேர்வெழுத வேண்டும். பல ஆண்டுகளாக, பழைய பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, திடீரென புதிய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுதுவது, தனித்தேர்வு மாணவர்களுக்கு பெரிதும் சிரமமாக இருக்கும்.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வுத்துறை விதிமுறைப்படி, 2012, செப்டம்பர் தேர்வு வரை, பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுதலாம். அதன்பிறகும், பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுத வேண்டுமெனில், தமிழக அரசின் அனுமதி தேவை. அதிகமான மாணவர்கள், &'அரியர்ஸ்&' வைத்திருந்தால், அவர்களின் நலன் கருதி, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கக்கோரி, அரசிடம் தேர்வுத்துறை அனுமதி கேட்கலாம். அரசு அனுமதித்தால், கூடுதலாக ஒரு பருவமோ அல்லது இரு பருவ தேர்வுகளுக்கோ மாணவர்கள் அனுமதிக்கப்படலாம். அரசு அனுமதி மறுத்தால், புதிய பாடத் திட்டத்தின் கீழ், அனைத்து தேர்வுகளையும் எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
10ம் வகுப்பில் 77 ஆயிரம் பேர்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தேர்வுகள், செப்டம்பர் 21 ம் தேதி துவங்குகின்றன. அக்டோபர் 1ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. பிளஸ் 2 தேர்வை, 48 ஆயிரத்து, 696 மாணவர்களும், 10ம் வகுப்பு தேர்வை, 76 ஆயிரத்து, 828 மாணவர்களும் எழுதுகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...