Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 13, 2011

ரெயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் போனஸ்: மத்திய அரசு அறிவிக்கிறது

இந்திய ரெயில்வேயில் மொத்தம் 13 லட்சத்து 26 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 12 லட்சம் பேர் ரெயில்வேயின் உற்பத்தி பிரிவுகளுடன் தொடர்புடைய பணியாளர்கள் ஆவார்கள். ரெயில்வேயின் உற்பத்தி உயர்வுக்கு ஏற்ப, ஒவ்வொரு ஆண்டும் இந்த பணியாளர்களுக்கு பண்டிகை கால போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 77 நாள் போனஸ் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் இந்திய ரெயில்வே கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.

எனவே ஊழியர்களுக்கு எந்த அடிப்படையில் போனஸ் வழங்கப்படும் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டு 78 நாள் போனஸ் வழங்க அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுக்காக இந்த பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

மந்திரி சபை ஒப்புதல் கிடைத்ததும் ரெயில்வே பணியாளர்களுக்கு இந்த போனஸ் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 78 நாள் போனஸ் கணக்கிட்டு வழங்கப்பட்டால் ரெயில்வே ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ. 8975 பெறுவார்கள்.
இது தொடர்பாக இந்திய ரெயில்வே பணியாளர்கள் தேசிய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ராகவைய்யா கூறியதாவது:-

கடந்த ஆண்டு சரக்கு போக்குவரத்து 876 மில்லியன் டன்னாக இருந்தது. நடப்பாண்டு அது 924 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. எனவே 80 நாள் போனஸ் கேட்டுள்ளோம். ரெயில்வே நிதி நிலை திருப்தியாக இல்லை என்பது உண்மைதான். அதற்காக ரெயில்வே பணியாளர்கள் பாதிக்கப்படக்கூடாது. நிதி நிலையை மேம்படுத்த பயணிகள் கட்டணத்தை உயர்த்த நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்டபோது ரெயில்வே ஊழியர்களுக்கு கூடுதலாக ரூ. 73 ஆயிரம் கோடி சம்பளம், பென்சன் வழங்க நேரிட்டது. இதே கால கட்டத்தில் மற்ற செலவினங்களும் உயர்ந்துவிட்டதால் ரெயில்வே துறை கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...