Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 17, 2011

சிதம்பரம் நகர மன்றத்தை கைப்பற்ற மனைவிகளை களமிறக்கும் நிர்வாகிகள் புது வியூகம்

சிதம்பரம்:சிதம்பரம் நகர மன்ற தலைவர் பதவியை கைப்பற்றாமல் விடமாட்டோம் என்ற முடிவுடன் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தங்களது மனைவிகளுக்கு சீட் கேட்டு கட்சித் தலைமையில் மனு கொடுத்து வருவது சிதம்பரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் நகராட்சி 100 ஆண்டுகள் கடந்த பாரம்பரியமிக்கது.நகராட்சி துவங்கியதில் இருந்து ராமசாமி செட்டியார், மார்கண்டேயன் பிள்ளை, சுப்ராய பிள்ளை, வி.வி.சாமிநாதன், துரை கலியமூர்த்தி, வி.எம்.எஸ்., சந்திரபாண்டியன் உள்ளிட்டோர் தலைவர்களாக இருந்து வந்த நிலையில் கடந்த தேர்தல் முதல் (2006ம் ஆண்டு) தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.சிதம்பரம் நகராட்சி தலைவர் பதவி முதல் முறையாக சுழற்சி முறையில் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதால் ஏற்கனவே தலைவராக இருந்தவர்கள், தலைவராகும் எண்ணத்தில் இருந்தவர்கள்.கவுன்சிலர்களாக இருந்தவர்கள், கவுன்சிலர்களாகும் எண்ணத்தில் இருந்தவர்கள் என அனைவருமே அதிருப்தியடைந்தனர்.

இந்நிலையில் பெரும்பாலான அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், தான் போட்டியிட முடியவில்லை என்றாலும் தங்களின் மனைவிகளையாவது களத்தில் இறக்க முடிவு செய்தனர்.
ஆனால் கடந்த தேர்தலில் தொகுதி கம்யூ,. கட்சிக்கு ஒதுக்கப்பட்டு அக்கட்சியை சேர்ந்த பவுஜியாபேகம் தலைவராக பதவி வகித்து வருகிறார்.உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான பதவி காலம் வரும் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கு முன்பாகவே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அதனையொட்டி அனைத்து கட்சிகளும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனு பெற்று வருகிறது.சிதம்பரம் நகர மன்ற தலைவர் பதவியை இந்த முறை யாருக்கும் விடமாட்டோம் எப்படியும் கைப்பற்றி விடுவோம் என முடிவுடன் ஒவ்வொரு அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்களின் மனைவிகளுக்கு சீட் கேட்டு கட்சி தலைமையிடம் விருப்ப மனு கொடுத்து விட்டு கட்சியிடம் சிபாரிசு கோரி வருகின்றனர்.அந்த வகையில் தி.மு.க., வில் மாஜி அமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரி மங்கையர்கரசி, மாஜி எம்.எல். ஏ., சரவணனின் மனைவி சுமதி ஆகியோர் போட் டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

அ.தி.மு.க., வில் நகர செயலர் தோப்பு சுந்தர் மனைவி நிர்மலா, இளைஞரணி ஜவகர் மனைவி சண்முகப்பிரியா, முன்னாள் நகர மன்ற தலைவர் குமார் மனைவி தேவகி, மாநில பேச்சாளர் தில்லை கோபியின் மனைவி ஹேமலதா, தில்லை சேகர் மனைவி வெண்ணிலா, முன்னாள் நகர செயலர் கலியபெருமாள் மனைவி பானுமதி, மாஜி எம்.பி., முருகேசன் மகள் டாக்டர் அறிவுச்செல்வி, முன்னாள் கவுன்சிலர் அல்லி உள்ளிட்டோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.அதேப்போன்று பா.ம.க., வில் நகர செயலர் குமார் மனைவி நாகவல்லி உள்ளிட்டவர்களும், வி.சி., யில் கவுன்சிலர் ராஜலட்சுமி உள்ளிட்டவர்களும், தே.மு.தி.க., வில் நகர செயலர் விஜயகுமார் மனைவி மங்கையர்கரசி, மாவட்ட மகளிரணி செயலர் சாந்தா, விக்னேஸ்வரி, பட்டதாரி ஆசிரியர் சங்க ராஜமன்னன் மனைவி மீனாட்சி உள்ளிட்டோரும் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.அவர்கள் அனைவரும் கட்சியில் சீட் கேட்டு பல வழியிலும் முயற்சித்து வருகின்றனர்.உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து கட்சிகள் முடிவெடுக்காத நிலையில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் எப்படியும் சிதம்பரம் நகர மன்றத்தை கைப்பற்றிட வேண்டும் என்ற முடிவுடன் வரிந்துகட்டிக் கொண்டு களத்தில் இறங்கி இருப்பதால் து சிதம்பரம் அரசியல் வட்டாரம் களை கட்டத் துவங்கி விட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...