Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 13, 2011

தினமும் ஒரு முட்டை, டாக்டருக்கு 'குட்பை'!

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய் நொடி எதுவும் அண்டாது என்று கூறப்படுகிறது.

தாய்பாலுக்கு அடுத்தபடியாக இயற்கையான முறையில் புரோட்டீன் கிடைக்கிறது என்றால் அது முட்டையில் தான். இதில் எக்கசக்க ஊட்டச்சத்துகள் உள்ளன. புரோட்டீன் தவிர்த்து முட்டையில் வைட்டமின்கள், மினரல்களும் உள்ளன. ஒரு முட்டையில் 70 முதல் 100 கலோரி வரை உள்ளது. மனித உடல் வளர்ச்சிக்குத் தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளது.

ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது.

இது மட்டுமா முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன.

மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 உள்ளது.
முட்டை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது. தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு கண்புரை வரும் வாய்ப்பு மிகக் குறைவே ஆகும். மூளை, நரம்பு மண்டலம் மற்றும் இதயத்திற்கு சிறந்தது முட்டை.

மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்தி கொண்டது முட்டை. வாரத்திற்கு 6 முட்டை சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு 44 சதவீதம் குறைவு என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முட்டையில் உள்ள சல்பர், வைட்டமின்கள், மினரல்கள் நகம் மற்றும் முடிக்கு நல்லது.

இத்தனை குணநலன்கள் உள்ள முட்டையை பச்சையாக குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால் கொழுப்புச் சத்துள்ளவர்கள் அதை தவிர்க்கவும்.

முட்டையின் முழு குணநலன்களையும் அடைய வேண்டுமானால் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு ஆகிய இரண்டையும் உண்ண வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...