Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 08, 2011

ஊழலில் சிக்கி கைது: திகார் ஜெயிலில் 5 எம்.பி.க்கள் 15க்கு 10க்குள் தவிப்பு

டெல்லி திகார் ஜெயிலுக்கு வரும் வி.ஐ.பி.க்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழலில் சிக்கிய பலர் தற்போது சிறையில் உள்ளனர். அரசியல் வாதிகள் மீது கடந்த காலங்களில் பல புகார்கள் கூறப்பட்டாலும் பெரிய திமிங்கலங்கள் வலையை அறுத்துக் கொண்டு தப்பி விடும் என்பதற்கு ஏற்ப, ஆட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தப்பி வந்தனர்.

ஆனால் சமீப காலமாக ஆதாரங்களுடன் குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால், வி.ஐ.பி.க்கள் அடுத்தடுத்து கைதாகிறார்கள். அந்த வகையில் தற்போது டெல்லி திகார் ஜெயிலில் 5 எம்.பி.க்கள் உள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி ஆகியோரும், காமன்வெல்த் போட்டி ஊழலில் சிக்கிய சுரேஷ் கல்மாடி, ஊழல் செய்து சொத்து குவித்த ஜார்க்கண்ட்டை சேர்ந்த மதுகோடா ஆகிய 4 எம்.பி.க் கள் உள்ளனர்.

தற்போது ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கிய அமர்சிங் எம்.பி. 5-வது எம்.பி. யாக திகார் ஜெயிலுக்கு சென்றுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பு ஊழலில் சிக்கி இவ்வளவு எம்.பி.க்கள் சிறையில் அடைக்கப்பட்டதில்லை.

அமர்சிங் எம்.பி. நேற்று போலீஸ் பஸ்சில் திகார் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மூன்றாம் எண் சிறை பகுதியில் அவர் தனி அறையில் அடைக்கப்பட்டார். 15க்கு 10 அடி அகலம் கொண்ட தனி அறைக்குள் அவர் உள்ளார். கோடீசுவரரான அவர் நேற்று இரவு எந்த வசதியும் இல்லாமல் தூங்க மிகவும் அவதிப்பட்டார். அவருக்கு ஒரே ஒரு சிறிய தொலைக்காட்சி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...