Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 18, 2011

ஊர்க்காவல் படைக்கு புதிதாக 4,338 இளைஞர்கள் தேவை

காவல்துறையுடன் சேர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் ஊர்க்காவல் படையில், புதிதாக 4,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்,
இந்த இளைஞர்கள் மக்களுக்கு சேவை புரிய உதவியாக இருப்பதுடன், குற்றங்களை குறைக்க காவல்துறையினருக்கு உதவியாகவும் இருப்பர். ஊர்க்காவல்படை' என்ற படைப்பிரிவு, தன்னார்வ அமைப்பாக தற்போது செயல்பட்டு வருகிறது.
காவலரைப் போன்று காக்கி உடையணிந்து கொண்டு, சட்டம்- ஒழுங்கை பராமரித்தல், விழாக்காலங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துதல், வெள்ளம், தீவிபத்து, புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மீட்புக் குழுவினருக்கு உதவுகின்றனர். இது தவிர, ஆன்மிக ஊர்வலங்களின் போது பாதுகாப்பு, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், சுகாதார விழிப்புணர்வு, தேர்தல் பணி உட்பட பல பணிகளில் இவர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றனர்.
தமிழகத்தில், 25 மகளிர் அணி உட்பட 105.5 ஊர்க்காவல் படை அணிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 2,750 மகளிர் உள்ளிட்ட 11,622 ஊர்க்காவல் படையினர் பணியாற்றி வருகின்றனர். ஊர்க்காவல் படையினரின் சேவையை உணர்ந்து, இவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, விரைவில் 4,338 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும், இவர்களுக்கான தினப்படியை 65 ரூபாயில் இருந்து 150 ரூபாயாகவும், இரவு நேர படி 75 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் மட்டும், சென்னையில் ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். சென்னையில் செயின்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்ததை முன்னிட்டு, அடையாறு பகுதியில், காவல்துறையினருடன் சேர்ந்து ஊர்க்காவல் படையினரும் ரோந்துப்பணியில் ஈடுபட்டதன் விளைவாக, செயின்பறிப்பு குறைந்தது குறிப்பிடத்தக்கது' என்றார்.
மேலும் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் கூறும்போது,"மக்களுக்கு சேவை புரியும் எண்ணத்தில் நாங்கள் வந்தாலும், அரசால் வழங்கப்படும் படிகள், எங்கள் குடும்பத்தின் சிறு தேவைகள், வாகனத்திற்கான எரிபொருள் செலவு போன்றவற்றை பூர்த்தி செய்வதற்கு உதவி வருகிறது. இந்த தொகை சரியான நேரத்தில் எங்களுக்கு கிடைப்பதில்லை. இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதாமாதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...