Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 01, 2011

நினைவாற்றலுடன் பேசுவதற்கான வழிமுறைகள்

பலரின் மத்தியில் உரையாற்றும்போது(எழுதிவைத்து பேசினால்கூட), நினைவுத்திறன் என்பது முக்கியம்.

நமது நினைவுத்திறன் எந்தளவிற்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே, நமது உரையானது, தெளிவாகவும், தொடர்ச்சியானதாகவும், பொருள் பொதிந்ததாகவும், கேட்போரை கவரும் விதத்திலும் இருக்கும். எனவே, அதுதொடர்பான பல ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

*உங்களைவிட தகுதியில் குறைந்தவர்கள், ஏன், கல்வியறிவே இல்லாதவர்கள் ஒரு விஷயத்தை செய்ய முடியும்போது, அதை உங்களாலும் நிச்சயம் செய்ய முடியும் என்று நம்ப வேண்டும்.
* ஒரு அலுவலகத்தில் நீங்கள் உயரதிகாரியாக இருக்கலாம். ஒரு முக்கியமான கூட்டத்தில் நீங்கள் பேச வேண்டியிருக்கலாம். இந்த சமயத்தில் உங்களுக்கு எந்த பதட்டமும் வேண்டாம். ஏனெனில், உங்களுக்கு கீழான பதவியில் இருப்பவர்கள்(பதவி ரீதியாகவாவது) உங்களை மட்டம் தட்டும் நிலையில் இருக்க மாட்டார்கள். மேலும், தேவைப்பட்டால், அவர்கள் அனைவருமே முட்டாள்கள் என்று கூட நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

* நீங்கள் உங்களது அனுபவத்தில் கேட்ட பலவித உரைகளையும், பேச்சுக்களையும் நினைவுப்படுத்திப் பார்க்கவும். அவற்றில் ஏதாவது உங்களை மிகவும் கவர்ந்திருக்கிறதா? அல்லது உலகை வென்றிருக்கிறதா? அல்லது அந்த உரையை வழங்கிய நபரிடம் நீங்கள் புதிதாக எதையேனும் கண்டீர்களா? உலகில் எவருமே பேசாத ஒன்றை அவர் பேசி விட்டாரா? இத்தகைய கேள்விகளுக்கு, பொதுவாக, நீங்கள் தரும் விடை இல்லை என்பதே. இதே மாதிரிதான் உங்களின் நிலையும். உங்கள் பேச்சைக் கேட்பவர்கள், உங்களை நுணுகி கவனிக்கப் போவதில்லை. உங்களால் முடிந்ததை, பதட்டப்படாமல் பேசிவிட்டு வந்தாலே அது சிறந்த உரையாக இருக்கும்.

* எங்காவது பேசப்போகும்போது, படபடப்புடன் இருக்க வேண்டாம். உங்களின் பெயர் வாசிக்கப்படப்போகும் சூழல், மேடையின் பிரமாண்டம், கேட்பவர்களின் கண்கள் என்ற எதை நினைத்தும் பரபரப்படைய வேண்டாம். அந்த நேரத்தில் ஒரு மகிழ்ச்சியான சம்பவத்தை நினைத்து, ரிலாக்சாக இருக்கவும். முடிந்தளவு, கேட்பவர்களின் கண்களைப் பார்ப்பதை தவிர்க்கவும். அதன்மூலம் உங்களின் சூழ்நிலை இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பும்.

*ஒரு விஷயத்தின் மையக்கருவைப் பற்றி நேரடியாக பேச வேண்டிய அவசியம் இருக்காதவரை, வழக்கமான விமர்சனக் கருத்துக்கள் அல்லது சம்பவக் குறிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியே பேசத் தொடங்கவும். ஏனெனில், சம்பவக்குறிப்பு முறையில் நாம் எதையும் எளிதாக மறக்க மாட்டோம்.

* நீங்கள் பேசத் தொடங்கும் முன்பாக, மதிப்பிற்குறிய தலைவர் அவர்களே/அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே/பெரியோர்களே, தாய்மார்களே/மாணவச் செல்வங்களே/அன்பார்ந்த ஊழியர்களே, என்ற வகையில் தொடங்கினால், மேடையில் உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள சில நொடிகள் அவகாசம் கிடைக்கும். அதன்மூலம் பிறவற்றை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...