புதுடில்லி: வரும் 2012 பிப்ரவரி மாதத்திற்குள் 20 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட கொதிகலன் தயாரிக்கும் திறனை பெறும் என பெல் நிறுவன நிர்வாக இயக்குனர் பிரசாதா ராவ் கூறியுள்ளார் . பெல் நிறுவனத்தின் 47-வது ஆண்டு கூட்டத்தி் கலந்து கொண்டு பேசும் போது இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: 2010-11-ம் ஆண்டுகளில் பெல் நிறுவனத்தின் லாபம் ரூ. 9 ஆயிரத்து 6 கோடியாகும். இந்நிறுவனத்தின் பங்குகளுக்கு அளி்க்கப்படும் வட்டியாக ரூ.ஆயிரத்து 525 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் தனியார் மற்றும் அரசு துறைகளுக்கு ஏழுபாய்லர்களும், ஒன்பது டர்போஜெனரேட்டர்களையும் தயாரித்து வழங்கியுள்ளது. ஆந்திர மாநிலம் ஐதாராபாத்தில் நானோ தொழில்பநுட்படத்தை விரிவாக்கும் விதத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிமையம் அமைக்கப்பட உள்ளது என தெரிவி்த்தார். ஆராய்ச்சி மற்றும்வளர்ச்சி பணிகளுக்காக ரூ.982 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 18.5 சதவீதம் கூடுதலாகும் என தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 738 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி ஆர்டர் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...