Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 04, 2011

மத்திய அமைச்சர்கள் சொத்துப் பட்டியல் மூச்சு முட்டுது:மதுரையில் "கோடி' கட்டும் அழகிரி

மத்திய அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் நேற்று, பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதிலுள்ள, அமைச்சர்களின் சொத்துக்களை பார்த்தால், மூச்சு மூட்டுகிறது.தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அழகிரிக்கு, மதுரையிலும், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் சொத்துக்கள், "கோடி' கட்டுகின்றன. உள்துறை அமைச்சர் சிதம்பரமோ, காபி எஸ்டேட் முதல், சைக்கிள் வரை உள்ளதாக ரூ.11 கோடிக்கு கணக்கு காட்டியுள்ளார்.மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்துக்கணக்கை வெளியிட வேண்டுமென்று பிரதமர் மன்மோகன் சிங் மூன்றுமுறை வலியுறுத்திக் கேட்டதன் அடிப்படையில் நேற்று முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள சொத்து விவரத்தில், தமிழக அமைச்சர்களில் அழகிரியின் சொத்துக்கள் மலைக்க வைப்பதாக உள்ளன.மதுரை இந்தியன் வங்கி கிளையில் ரூ.5.39 கோடி ரொக்கம். ஹோண்டா சிட்டி, லேண்ட் ரோவர், டொயட்டா இன்னவோ, ஸ்கோடா கார்கள். அழகிரியின் பெயரில் மட்டும் 85 கிராமும், மனைவி காந்தியின் பெயரில் 700 கிராமும், மகன் பெயரில் 50 கிராம் தங்கமும் உள்ளதாம்.விவசாய நிலங்கள்:உத்தங்குடியில் 2.56 ஏக்கர்- மதிப்பு ரூ.50 லட்சம்.கள்ளந்திரியில் 7.5 ஏக்கர்- மதிப்பு ரூ. 20 லட்சம்.சின்னாம்பட்டி 1.5 ஏக்கர்- மதிப்பு ரூ.5 லட்சம்.சிந்தாமணி பகுதியைச் சுற்றிலும்தான் நிறைய விவசாய நிலங்கள், கணக்கு காட்டப்பட்டுள்ளன. அங்கு 57 சென்ட் நிலம்- மதிப்பு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம். இன்னொரு 38 சென்ட் நிலம்-மதிப்பு ரூ.2 லட்சத்து 76 ஆயிரம். மற்றொரு 1 ஏக்கர் 32 சென்ட் நிலம்- மதிப்பு 2 லட்சத்து 64 ஆயிரம்.இதேபோல, இன்னொரு 1 ஏக்கர் 46 சென்ட்-மதிப்பு ரூ.2 லட்சத்து 92 ஆயிரம். இன்னொரு 2 ஏக்கர் 27 சென்ட்- மதிப்பு ரூ.4 லட்சத்து 64 ஆயிரம்.
விவசாயமல்லாத இடங்கள்:மதுரை தல்லாகுளம் பகுதியில், ஒரு ஏக்கர் 44 சென்ட் நிலப்பரப்பு- மதிப்பு ரூ.60 லட்சம். திருப்பரங்குன்றத்தில், 12 சென்ட் நிலப்பரப்பு-ரூ.4 லட்சம். மாடக்குளத்தில் 26 சென்ட் நிலப்பரப்பு- ரூ.29 லட்சம். பொன்மேனி பகுதியில் ஆறு கிரவுண்ட் பரப்பு நிலம்-மதிப்பு ரூ.90 லட்சம். சத்யசாயி நகர் வீடு 20 சென்ட் பரப்பளவு- ரூ.60 லட்சம். சென்னையில், ராஜா அண்ணாமலைபுரம்- 1,100 சதுரஅடி பரப்பு-மதிப்பு ரூ.22 லட்சம். மதுரை நாராயணபுரம் ஜாஸ் டவர்ஸ் பிளாட் வீடு ரூ.12 லட்சம். மொத்தத்தில் அழகிரிக்கு ரூ.12.88 கோடிக்கு சொத்து உள்ளது.
இவையெல்லாம் அழகிரியின் பெயரில் கணக்கு காட்டப்பட்டிருக்கும் சொத்துக்கள் என்ற நிலையில், மனைவி காந்தியின் பெயரில் அமைந்த சொத்து மதிப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.10 லட்சம். சேமிப்பு கணக்கில் ரூ.38 லட்சத்து 73 ஆயிரத்து 183. கரன்ட் அக்கவுன்ட்டில் ரூ.14 லட்சம்.


காந்தி சில்க்ஸ் முதலீடு ரூ.70 லட்சம். தயா கல்யாண மகால்- மதிப்பு ரூ.13 லட்சம். சென்னை நந்தனம் சேமியர்ஸ் சாலையில் 5,500 சதுர அடியில் வீடு-மதிப்பு 4 கோடியே 39 லட்சம். ஐயன் பாப்பாக்குடியில் 3,000 சதுர அடி நிலம்-மதிப்பு 2 லட்சம்.மகன் தயாநிதியின் பெயரில் காட்டப்பட்டுள்ள சொத்து விவரங்களை பார்க்கும்போது, சென்னை திருவான்மியூரில் 4,000 சதுர அடி பிளாட் வீடு-மதிப்பு ரூ.36 லட்சம். மயிலாப்பூர் பீமண்ண முதலி தெருவில் 8,160 சதுர அடி வீடு - ரூ.2 கோடி. சென்னை ஈஞ்சம்பாக்கம் பண்ணைவீடு 50 சென்ட்- ரூ.1.5 கோடி. கோடைக்கானல் பர்ன்ஹில் சாலையில் 60 சென்ட் நிலத்தில் பங்களா- மதிப்பு ரூ.68 லட்சம். மேற்கண்ட தகவல்கள் அமைச்சர் அழகிரியின் பெயரில் இடம்பெற்றுள்ளன. இந்த சொத்துக்களின் மதிப்புகள் எல்லாமே எந்த அடிப்படையில் போடப்பட்டுள்ளன என்பது புரியவில்லை. அரசு மதிப்பா, சந்தை மதிப்பா என்பது தெரியவில்லை.


மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தன் பங்கிற்கு ரூ.11 கோடி வரை சொத்துக்கணக்கு காட்டியுள்ளார். கர்நாடகாவில் குடகு பகுதியில் காபி எஸ்டேட்-ரூ.29 லட்சம் மதிப்பு என்று கூறியுள்ளதோடு, ரூ.34 லட்சம் அளவில் பிற சொத்துக்கள் என்ற பெயரில் கணக்கு கூறியுள்ளார். பங்குச் சந்தையில் ரூ.57 லட்சம். பொதுவைப்பு நிதியாக ரூ.6 லட்சத்து ரூ.92 ஆயிரம். அஞ்சல வைப்புநிதியாக ரூ.19 லட்சம். நிரந்தர வைப்பு நிதியாக ரூ.2 கோடியே 15 லட்சம். சொந்தமாக ஒரு சைக்கிள் வைத்துள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.1,239 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா, போர்டுபியஸ்டா கார்கள் வைத்துள்ளார். நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் ரூ.76 லட்சம் மதிப்புள்ள பங்களா.சிதம்பரத்தின் மனைவி நளினியின் பெயரில், ரூ.10 கோடிக்கு சொத்துக்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இன்னொரு அமைச்சர் வாசனோ, தனக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 400 கிராம் தங்கமும், மனைவி சுனிதாவுக்கு ரூ.6 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள 750 கிராம் தங்கமும், ரூ.3 லட்சம் மதிப்பு கொண்ட 10 காரட் வைரமும், ரூ.5 லட்சத்து 400 மதிப்பு கொண்ட 27 கிலோ எடையுள்ள வெள்ளியும் வைத்திருப்பதாக கூறியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...