Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 04, 2011

மக்களுக்கு அரசு சேவையை வழங்குவதில் தாமதப்படுத்தினால்அபராதம்

பொது மக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளில் காலதாமதம் ஏற்படுத்தினால், அரசு ஊழியர்களுக்கு தினமும் 250 வீதம் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, கேரள அரசு புதிய சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட முன்வடிவை, கேரள அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.மாநில அரசு, பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை, அந்தந்த துறை அலுவலகங்கள் மூலம் வழங்கி வருகிறது. ஆனால், இதில் நிறைய காலதாமதம் ஏற்பட்டு பலரும் அதிருப்தியில் தான் இருந்து வருகின்றனர்.

நிலப்பட்டா, அரசு சான்றிதழ்கள், உரிமங்கள், உதவித்தொகைகள் என பலவும் காலதாமதம் செய்யப்படுவதும், ஏதாவது காரணங்களைக் கூறி விண்ணப்பங்களை தட்டிக் கழிப்பதும், அதன் மூலம் லஞ்சம் பெறுதல் என, பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. இவற்றை எல்லாம் தடுக்கவும், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகள், சலுகைகள் எத்தனை நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்பதை விரைவில் கேரள அரசு அறிவிக்க உள்ளது.
விண்ணப்பித்த நாட்களில் இருந்து அரசு குறிப்பிட்ட நாட்களுக்குள், விண்ணப்பித்தவருக்கு சேவை கிடைத்திருக்க வேண்டும். உதாரணமாக, வாகன ஓட்டுனர் பயிற்சிக்கு விண்ணப்பித்த அதே நாளில் அதற்கான உரிமம் (எல்.எல்.ஆர்.,) வழங்கப்பட வேண்டும். மறுநாள் வழங்கினால், குறிப்பிட்ட ஊழியர் அபராதம் செலுத்த நேரிடும். காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் 250 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும். இது அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். பொதுமக்கள் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் உடனடியாக ரசீது வழங்கப்பட வேண்டும்.அந்த ரசீதில், அதற்கான சேவை என்றைக்கு வழங்கப்படும் என்பது குறித்து தெளிவாகக் குறிப்பிடவேண்டும். அக்குறிப்பிட்ட நாளில் விண்ணப்பித்தவருக்கு, அதற்குரிய சேவை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விண்ணப்பத்தை நிராகரிக்க சம்பந்தப்பட்ட ஊழியருக்கோ, அதிகாரிக்கோ அதிகாரம் உள்ளது.

விண்ணப்பத்தை நிராகரிக்க போதுமான காரணங்கள், ஆவணங்கள் வழியே தெளிவாகக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பித்து அரசு சேவை கிடைக்காமல் இருந்தாலோ, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர், அதற்குரிய உயரதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு சேவை கட்டணம் செலுத்த வேண்டும். 
இந்த உயரதிகாரிக்கு, சிவில் கோர்ட் நீதிபதியின் அதிகாரங்கள் இருக்கும். இப்புதிய அதிரடி சட்ட முன்வடிவை, கேரள மாநில அரசு தயாரித்துள்ளது. இதை நேற்று முன்தினம், மாநில அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் இச்சட்டத்தை கொண்டு வர, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...