Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 20, 2011

உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லிம் லீக் தனித்து போட்டி

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது. அக்கட்சியின், உயர்நிலை அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் நடந்த ஆலோசனையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்படும். தமிழக உள்ளாட்சித் தேர்தலில், முஸ்லிம்கள் அதிகம் உள்ள வார்டுகளை, பெண்கள் வார்டாக மாற்றியுள்ளனர். காயல்பட்டினம், கீழக்கரை, கடையநல்லூர், தென்காசி, திருவண்ணாமலை, தேவகோட்டை, குடியாத்தம், ஆம்பூர், குன்னூர், பேர்ணாம்பட்டு, கூத்தாநல்லூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான், சுழற்சிமுறையில் தனி தொகுதி மற்றும் வார்டுகள் மாற்றப்படும்.

ஆனால், தற்போது ஐந்து ஆண்டுகள் மட்டுமே முடிந்த நிலையில், வார்டு மாற்றம் செய்திருப்பது முஸ்லிம்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக அரசின் ஏழு, எட்டாம் வகுப்பு உருது பாடப் புத்தகத்தில், நபி மற்றும் கலிபாக்கள் உருவ சித்திரம் வரையப்பட்டுள்ளது. இதை உடனே திருத்துவதுடன், இதற்கு காரணமானோர் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டத்திற்கு பின், காதர்மொய்தீன், நிருபர்களிடம் கூறும்போது, "உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்ந்தெடுத்து, அவற்றில் தனித்து போட்டியிடுவோம்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...