வெளிநாடுகளுக்கு பயணம் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலைக்காகவும், உயர் கல்விக்காகவும், சுற்றுலாக்களுக்கும் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகிறார்கள். இதனால் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் எப்போதும் பரபரப்பாகவும், பிசியாகவும் காணப்படும்.
நீண்ட வரிசையில் காலையில் இருந்து காத்து நின்று பாஸ் போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் நிலை இருந்தது. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை சென்னையில் 3 இடங்களில் புதிதாக பாஸ்போர்ட் அலுவலகங்களை திறக்க அனுமதி அளித்தது. பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காக மூன்று பகுதிகளாக பிரித்து கடந்த 16-ந்தேதி முதல் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோடு, சாலிகிராமம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்டதால் கூட்டம் குறைந்துள்ளது. ஆனால் ஆன்- லைனில் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. கடந்த 10 நாட்களாக ஆன்-லைன் செயல்படவில்லை. புதிய அலுவலகம் திறப்பதற்காக 16-ந்தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பாக ஆன்-லைன் புக்கிங் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே அப்பாயிண்ட் மெண்ட் வாங்கியவர்களுக்கு மட்டும் சாஸ்திரி பவனில் பாஸ்போர்ட் தொடர்பான விசாரணை, சான்றிதழ் சரிபார்த்து பணம் கட்டுதல் போன்றவை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
புதிதாக ஆன்- லைனில் விண்ணப்பிக்க கூடியவர்கள் ஒரு வாரமாக பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். புதிய திட்டத்தின் கீழ் டிராவல் ஏஜெண்டுகள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் நேரில் சென்றுதான் விண்ணப்பிக்க முடியும். www.passportofindia.gov.in என்ற இணையதளத்தில் ஐடி. கிரியேட் செய்து ஆன்-லைனில் பதிவு செய்யும் போது இறுதியாக எந்த தேதியில் அப்பாயிண்ட் மெண்ட் என்பது உறுதி செய்யப்படும்.
தேதி வராததால் விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து முயற்சி செய்து ஏமாற்றம் அடைகிறார்கள். தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஆன்-லைனில் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் ஒரு வாரமாக பொதுமக்கள் என்ன செய்வதுஎன்று தெரியாமல் அலைகிறார்கள். இதுபற்றி பாஸ்போர்ட் அலுவலகம் தரப்பில் எந்த தகவலும் விளக்கமும் தரப்படவில்லை. ஆன்-லைனில் முயற்சி செய்யுங்கள் என்று கூறி விடுகின்றனர். தொழில் நுட்ப காரணமாக திடீர் பயணம் செய்யக்கூடியவர்கள், பாஸ்போர்ட் புதுப்பிக்க கூடியவர்கள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...