காட்டுமன்னார்கோவில்:சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்பும் பணிக்காக வடவாறு வழியாக வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையிலிருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக மழைநீர் வரும். மேலும், இந்த ஏரியிலிருந்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக நாள்தோறும் வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேட்டூரில் இருந்து கடந்த ஜனவரி மாதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வந்ததால் வறண்டு கிடந்த ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 46.50 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
தற்போது, கோடை வெயிலின் காரணமாகவும், சென்னைக்கு நாள்தோறும் வினாடிக்கு 77 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுவதாலும் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே