Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 18, 2012

போலி குடும்ப அட்டைகள் வழங்கினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை, ஜூலை 17: போலி குடும்ப அட்டைகள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எச்சரித்தார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் அமைச்சர் பேசியது: புதிய குடும்ப அட்டை கோரி பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதில் கவனமுடன் செயல்பட வேண்டும். புதிய குடும்ப அட்டைக்காக வீடுகளில் மேற்கொள்ளப்படும் விசாரணையை தீவிரப்படுத்தி உண்மையான குடும்பங்களுக்கு அட்டைகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். போலி குடும்ப அட்டைகள் வழங்கியது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். போலி குடும்ப அட்டைகளை களைய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் புகார்கள் தெரிவிக்க விரும்பினால் அதற்கான தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு கூறலாம். மேலும் உணவுப் பொருள் வழங்கல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள மாநில நுகர்வோர் சேவை மையத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் புகார்களைக் கூறலாம்.

 இத்தகைய புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து குறைகள் களையப்படும் என்று
அமைச்சர் கூறினார். தொலைபேசி எண்கள்: 044-2859 2828, 7299998002, 8680018002, 7200018001, 9445464748, 7299008002, 8680028003, 720048002 ஆகிய எண்களில் புகார்களைத் தெரிவிக்கலாம்.

1 கருத்துகள்:

vasanth சொன்னது…

since 3years we didnt get ration card, then how will get duplivcate, stupid tamilnadu govement

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...