Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 08, 2011

பிஇ: இன்று பொது கலந்தாய்வு துவக்கம்- 1.4 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு அழைப்பு

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இன்று முதல் 35 நாட்களுக்கு நடக்கிவிருக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள 484 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 28-ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இன்று மாற்று திறனாளிகள் மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நடந்தது. கண்பார்வை குறைபாடு உடையவர்கள், ஊனமுற்றவர்கள், காது கேட்காதவர்கள் என 3 பிரிவுகளில் தலா 1000 ஆயிரம் இடம் வீதம் 3 ஆயிரம் இடங்கள் உள்ளன.

3 ஆயிரம் இடங்கள் இருக்கின்றபோதிலும் காது கேளாதவர்கள் 43 பேர், பார்வை குறைந்தவர்கள் 47 பேர், ஊனமுற்றவர்கள் 280 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு கடிதங்களை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் வழங்கினார்.

இன்று முதல் அனைத்து பிரிவினருக்கான பொது கலந்தாய்வு துவங்குகிறது. இந்த கலந்தாய்வு இன்று முதல் 35 நாட்களுக்கு நடக்கவிருக்கிறது. இதில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 622 மாணவ-மாணவியர்கள் கலந்து கொள்கின்றனர்.

தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தவர்களுக்கான ஒதுக்கீட்டு கடிதத்தை அமைச்சர் பழனிச்சாமி வழங்குகிறார்.

பாலிடெக்னிக் சேர்க்கை ஆணை: அமைச்சர் பழனிச்சாமி வழங்கினார்

முன்னதாக, சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடந்ததது. இதை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பார்வையிட்டார்.

அங்கு வந்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் மாணவர் சேர்க்கைக்கான ஆணையை மாணவர்களிடம் வழங்கினார்.

அந்த கல்லூரியில் உள்ள பரிசோதனை கூடங்களை ஆய்வு செய்து, உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார். ஆய்வின் போது தொழில் நுட்பக்கல்வி இயக்கக ஆணையர் ரமேஷ் சந்த் மீனா, சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுந்தர மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...