Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 09, 2011

"சூரிய ஒளியிலிருந்து 3000 மெகாவாட் மின்சாரம்:அரசு திட்டம்

"இன்னும் ஐந்து ஆண்டுகளில்சூரிய ஒளியிலிருந்து 3000மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது,''என, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தின்துணை பொது மேலாளர் குருராஜன்தெரிவித்தார்.
இந்திய தொழில்கள் கூட்டøப்பு, தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கம் சார்பில், கோவையில் எரிசக்தி சேமிப்பு மற்றும் மரபுசாரா எரிசக்தி குறித்த ஒருநாள் கருத்தரங்கு கோவையில்நடந்தது.கருத்தரங்கு துவக்கவிழாவுக்கு, இந்திய தொழில்கூட்டமைப்பின் கோவை மண்டல தலைவர் ரவிசாம் தலைமைவகித்தார். தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் தலைவர்மகேந்திர ராம்தாஸ் வரவேற்றார்.
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு ஏஜென்ஸி (டெடா)துணை பொதுமேலாளர் குருராஜன் துவக்கி வைத்து பேசியதாவது:மரபு சாரா எரிசக்தியான காற்று, சூரிய ஒளி போன்றவற்றிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மின்சார பற்றாக்குறை உள்ள இச்சமயத்தில் காற்றாலை மின்சாரம் நமக்கு கைகொடுப்பதாக உள்ளது.இதே போன்று சூரிய ஒளிமின்சக்தி உற்பத்திக்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.அடுத்த ஐந்து ஆண்டுகளில்சூரிய ஒளியில் மட்டுமிருந்து 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு வரிவிலக்கு அளிக்கவும்,மானியம் வழங்கவும் அரசுமுடிவு செய்துள்ளது.வறட்சி நிலவும் தென் மாவட்டங்களில் உள்ள நிலங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்காஅமைக்க முன் வருவோருக்குஅரசு சலுகைகளை அளிக்க திட்டமிட்டுள்ளது. அதிக அளவில் நிலம் தேவைப்படுவதால்,சூரிய ஒளி பூங்கா பிற மாவட்டங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.தற்போது தமிழகத்தில் 2500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை நிலவுகிறது. வரும் 2013ம் ஆண்டுக்குள் இதை நிறைவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு, டெடா பொதுமேலாளர் குருராஜன் பேசினார்.

தமிழ்நாடு மின் பகிர்மான கழக, கோவை மண்டல தலைமை இன்ஜினியர் தங்கவேலு பேசியதாவது: காற்றாலை மின்சார உற்பத்திதிறன் 5000 மெகாவாட்டாக இருந்தாலும், சீரான மின்சப்ளை 3000 மெகாவாட் ஆக மட்டுமே உள்ளது. சீரற்ற மின்சாரமாக இருப்பதால், பல பகுதிகளில் குறைவழுத்த மின்சாரம் வினியோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது குறித்து பல இடங்களில் இருந்து புகார்கள் வருகின்றன.கோவை மாவட்டத்தில் மட்டுமே மின்சாரத்தை சேமிக்கும் பொருட்டு, 10 ஆயிரம் சி.எப்.எல்., பல்புகளை இலவசமாக மக்களுக்கு வழங்கியுள்ளோம். பல உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் ஏற்றும் பம்ப்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன.ஆனால், அவ்வாறு வழங்க இயலாத சூழ்நிலை,ஆள் பற்றாக்குறை மின்பகிர்மான கழகத்தில் உள்ளது.

தமிழகத்தில் உள்ள மின் பற்றாக் குறையை சமாளிக்க மீண்டும் நிலக்கரி அனல் மின்சாரத்தையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.  இதன் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதே சமயம்,நிலக்கரியை பயன்படுத்துவதால்,புவி வெப்பமயமாதல் ஏற்படும். இப்பிரச்னையை சமாளிக்க மரக்கன்று நட விழிப்புணர்வை, மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. கோவையில், "சிறுதுளி'அமைப்போடு இணைந்து, மரக்கன்று நட்டுள்ளோம். ஒவ்வொரு மின்வாரிய முகாமின்போதும் ஒவ்வொரு வருக்கும் மரக்கன்றுகளை வழங்கியுள்ளோம்.இவ்வாறு, இன்ஜினியர் தங்கவேலு பேசினார்.தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்கத்தின் துணைத்தலைவர் இளங்கோ நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...