Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 24, 2011

மத்திய அரசு அனுமதி பிளஸ் 2 முடித்தவர்களும் ஐஐஎம்&ல் எம்பிஏ படிக்கலாம்

புதுடெல்லி: இந்தூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐஐஎம்) பிளஸ் 2 முடித்தவர்களுக்காக 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்பிஏ படிப்பை நாட்டிலேயே முதன் முறையாக இந்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
பொதுவாக எம்பிஏ படிப்பில் சேர ஏதாவது ஒரு இளநிலை பட்டம் இருக்க வேண்டும். ஆனால் இந்த படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். நுழைவுத் தேர்வு எழுத தேவையில்லை. 12ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் நிறுவனம் நடத்தும் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
எனினும், உயர் கல்வி நிறுவனமான ஐஐஎம், இளநிலை படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த எம்பிஏ படிப்பை அறிமுகம் செய்வதால், ஐஐஎம் என்ற பிராண்டுக்கென உள்ள மதிப்பு குறைந்துவிடும் என மற்ற ஐஐஎம் இயக்குநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் புகார் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்தூர் ஐஐஎம் இயக்குநர் ரவிச்சந்திரன், மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபலை சந்தித்து இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து, புதிய படிப்புக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
5 ஆண்டுகள் கால அளவுள்ள இந்த படிப்பின் முதல் 3 ஆண்டுகள் இளநிலை பட்டப் படிப்பும், கடைசி 2 ஆண்டுகள் முதுநிலை நிர்வாகப் படிப்பும் இடம் பெறும். இதில் 120 மாணவர்கள் சேர்க்கப்படுவர். முதல் 3 ஆண்டுகளுக்கு தலா ஸி3 லட்சமும், கடைசி 2 ஆண்டுகளுக்கு தலா ஸி5 லட்சமும் கட்டணம் வசூலிக்கப்படும்.
ÔÔமேலாண்மை கல்வியுடன் இளநிலை பட்டப்படிப்பையும் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் 5 ஆண்டு எம்பிஏ படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய படிப்பு ஐஐஎம் நிறுவனத்தின் மதிப்பை எந்த வகையிலும் பாதிக்காது. தரம் எந்த வகையிலும் குறையாதபடி பார்த்துக் கொள்வோம்ÕÕ என இந்தூர் ஐஐஎம் இயக்குநர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...