Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 21, 2011

யாருக்கு ஓட்டு என்று தெரிந்து கொள்ள நவீன இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு

புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை தெரிந்து கொள்ளும் புதியகருவி இணைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன வாக்குப்பதிவு இயந்திரத்தில் அடுத்த வாரம் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடப்பதாக சில அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின.

இதனால், வாக்காளர் எந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் உறுதிபடுத்திக் கொள்ள உடனடியாக ஒப்புதல் சீட்டு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறிய அச்சிடும் கருவியை இணைத்து நவீன வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. இந்த நவீன இயந்திரத்தில் வாக்காளர் வாக்களித்தது, அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு அச்சிடப்பட்டு அவருக்கு கிடைக்கும்.
இந்த நவீன வாக்குப்பதிவு இயந்திரத்தை அடுத்த வாரம் சோதனை செய்யப்போவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. கிழக்கு டெல்லி, லடாக், திருவனந்தபுரம், ஜெய்சல்மார் ஆகிய இடங்களில் வரும் 24ம் தேதியும், சிரபுஞ்சியில் 26ம் தேதியும் புதிய வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடக்கும். ஆர்வம் உள்ளவர்கள் எல்லாரும் இந்த மாதிரி வாக்குப்பதிவில் பங்கேற்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...