Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 23, 2015

சேத்தியாத்தோப்பில் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் தொடங்கி வைத்தார்.

சேத்தியாத்தோப்பு காவல்துறை மற்றும் நண்பர்கள் குழு, ஊர்க்காவல் படை சார்பில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தொடங்கி வைத்தார். சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பஸ் நிலையம், கடை வீதி, குறுக்கு ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. இந்த பேரணியில் போலீசார் அனைவரும் ஹெல்மெட்(தலைக்கவசம்) அணிந்தபடி மோட்டார் சைக்கிளில்
சென்றனர்.

இதில் இன்ஸ்பெக்டர்கள் சேத்தியாத்தோப்பு அம்பேத்கர், காட்டுமன்னார்கோவில் மைக்கேல்இருதயராஜ், குமராட்சி கலைமணி மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். பேரணியின்போது மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
source-Dailythanthi

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...