Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 13, 2015

முஸ்லிம்களை பிடிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும் : -உ.பி., அமைச்சர்!

சூரிய நமஸ்காரம் செய்ய மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும் என்று சொன்ன 'பாஜக' யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,முஸ்லிம்களை பிடிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும் என்று கூறியுள்ளார், உத்திரப்பிரதேச அமைச்சர் ஆசம்கான்.

இந்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு பாகிஸ்தானால் இடம் கொடுக்க முடியாது, எனவே முஸ்லிம் விரோத துவேஷ கருத்துக்களை பேசிவரும் யோகி போன்ற எங்களை பிடிக்காத சில நபர்கள் வேண்டுமானால் பாகிஸ்தானுக்கு குடிபெயரலாம் என்றார், ஆசம். யோகா சிறந்த உடற்பயிற்சி என்பதை தாம் ஏற்றுக் கொள்ளும் அதேவேளையில், அதில் சூரியனை வணங்குவது என்ற அம்சத்தை நாங்கள் ஏற்க முடியாது, என்றார், உபி அமைச்சர். நாங்கள் சூரியனை 'சூரியன்' என்கிறோம் நீங்கள் 'சூரிய பகவான்' என்கிறீர்கள் இதில் உள்ள வித்தியாசத்தை புரிந்துக் கொள்ளாமல், முஸ்லிம்களை சாடுவது ஏற்புடையதல்ல. யோகாவின் சிறப்பை பறைசாற்றும் நீங்கள் முஸ்லிம்களின் தொழுகையை குறித்து என்றாவது சிந்தித்ததுண்டா?

ஒருமுறை மன ஓர்மையுடன் தொழுது
பாருங்கள்... அதில் உள்ள பலன்களை தெரிந்துக் கொவீர்கள் என்றார், ஆசம்கான். எமெர்ஜென்சி' காலக்கட்டத்தில் ஜெயிலில் இருந்தபோது தம்முடன் சேர்ந்து பல ஹிந்து சகோதரர்கள் நோன்பு நோற்றதையும் தொழுகையில் ஈடுபட்டதையும் நினைவு கூர்ந்தார் அமைச்சர் ஆசம்கான்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...