துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற நடத்தப்படும் தேர்வில் இனி தமிழ் உள்ளிட்ட நான்கு இந்திய மொழிகளிலும் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற கணினி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே உரிமம் பெற முடியும். இந்த தேர்வு ஆங்கிலம், உருது, அரபிக் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து, தமிழ், இந்தி, பெங்காலி, மலையாளம், ஆகிய இந்திய மொழிகள் உட்பட 11 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என சாலை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும், பயிற்சி வகுப்புகளும் தமிழ் உள்ளிட்ட
மொழிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...