ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் (ஐபிஎல்) போட்டிகளின் முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனிப்பட்ட சலுகை காட்டிய விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சம்பந்தப்பட்டுள்ளதாக இந்திய எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்த விவகாரத்தில் சுஷ்மா சுவராஜை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. ஐபில் கிரிக்கெட் போட்டிகளை உருவாக்கி அதை வெற்றிகரமாக முதல் மூன்று ஆண்டுகள் நடத்தியவராக பார்க்கப்பட்டவர் லலித் மோடி. ஆனால் அந்தப் போட்டிகளில் ஊழல் நடைபெறுவதற்கு அனுமதித்தார்; அதனால் தனிப்பட்டமுறையில் லாபமடைந்தார் என்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்தன. இந்த விஷயம் நீதிமன்றம் சென்று வழக்கின் விசாரணைகள் தீவிரமடைந்தபோது அதிலிருந்து தப்பும் நோக்கில் லலித் மோடி இந்தியாவை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்கு சென்றார். ஆனால் அவருடைய கடவுச்சீட்டை இந்திய நீதிமன்றம் முடக்கிவிட்டது.
இந்நிலையில் போர்ச்சுகல் நாட்டில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் தனது மனைவியை சென்று பார்க்க பயண ஆவணங்களை லலித்மோடி பிரிட்டிஷ் அரசிடம் கோரியிருந்தார். லலித் மோடிக்கு பயண ஆவணங்களை பிரிட்டிஷ் அரசு வழங்கினால் அதனால் இரு தரப்பு உறவுகள் பாதிக்காது என்று பிரிட்டனின் உள்துறை விவகாரங்களுக்கான பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாசிடம் தான் கூறியதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.
பதவி விலகவேண்டுமென எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் போர்ச்சுகல் நாட்டிற்கு லலித் மோடி செல்ல உதவிய பாஜக அரசு, அவரை இந்தியாவுக்கு அழைத்து வரவும், அவர் மீதான நீதி விசாரணையில் அவரை பங்கேற்க வைக்கவும், ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை என்று
காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அத்தோடு இதே விவகாரம் தொடர்புடைய மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியைப் போன்றே இடதுசாரி கட்சிகளும், டில்லியின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரிவருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...