Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 14, 2015

கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் புதிய நிர்வாகிகள் தேர்வு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்டபொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் லால்பேட்டை ஹலிமா மஹாலில் 13/06/15 சனிக்கிழமை காலை நடைப் பெற்றது. 



தெற்கு மாவட்ட தலைவர் கே .ஏ .அமானுல்லா தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஏ .சுக்கூர் வரவேற்றுப் பேசினார்.தலைமை நிலைய தேர்தல் பொறுப்பாளர்களாக பங்கேற்ற மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி ஏ .ஷஃபீகுர் ரஹ்மான் ,மாநில செயலாளர்கள் காயல் மஹபூப் ,ஏ .எம் .ஷாஜஹான் ஆகியோர் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.
கடலூர் தெற்கு மாவட்ட தலைவராக: லால்பேட்டை கே.ஏ அமானுல்லா செயலாளராக: விருத்தாச்சலம் ஏ .சுக்கூர்
பொருளாளராக: மங்கலம்பேட்டை ஏ .கே .ஹபிபுர் ரஹ்மான்
இளைஞர் அணி அமைப்பாளராக சிதம்பரம் தாஜுத்தின்
துணை அமைப்பாளராக லால்பேட்டை ஏ.ஆர்.மர்ஜூக்
மாணவர் அணி அமைப்பாளராக மங்கலம்பேட்டை ஹம்தான்
துணை அமைப்பாளராக சிதம்பரம் நசீர் ஆகியோர்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இந்நிகழ்ச்சியில் லால்பேட்டை நகர தலைவர் எம்.ஒ .அப்துல் அலி , நகர பொருளாளர் ஏ .எம் .ஜாபர் ,மாநில பொதுக் குழு உறுப்பினர் ஏ.ஆர் அப்துல் ரஷீத் ,மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் ஏ .எஸ் .அஹமது பி.எம்.அப்துல் காதர் முஹம்மது ஹசன் மாணவரணி அகமதுல்லா முஹம்மது இஸ்மாயில் உமர் முக்தார் இம்தியாஜ் அஹமது மகாதீர் முஹம்மது மற்றும் மாவட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.நகர செயலாளர் எம்.ஹெச். முஹம்மது ஆசிப் நன்றி கூறினார்.

 தகவல்:- லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில்
source:kollumedu.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...