உத்தரபிரதேச மாநிலத்தின் பரபங்கி நகரில் மேகி நூடுல்சில் அதிக அளவில் ரசாயன பொருள் கலந்து இருப்பது கண்டறியப்பட்ட தகவல் சுதிர்குமார் ஓஜாவுக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர், முசாபர்பூர் நகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இந்திய தண்டனை சட்டம் 270, 273, 276 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார். இதை ஏற்று கொண்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பிரசாத் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து மாறு உத்த்ரவிட்டார்.
மேகி நூடுல்ஸ் விளம் பரங்களில் நடித்த நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரிதீட்சித், பிரித்தீ ஜிந்தா ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வக்கீல் சுதிர்குமார் ஓஜா கோரிக்கை விடுத்தார். இதையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி, தேவைப்பட்டால் அமி தாப்பச்சன், மாதுரிதீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோரை கைது செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேகி நூடுல்ஸ் பற்றிய இந்த சர்ச்சை காரணமாக கடைகளில் அதன் விற்பனையை நிறுத்தி வைக்குமாறு கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மராட்டியம், பீகார், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், அரியானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மேகி நூடுல்சை பரிசோதனை கூடங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளன. அந்த ஆய்வறிக்கை வந்த பிறகு மேகி நூடுல்ஸ் மீதான
முடிவை வெளியிட இம்மாநில அரசுகள் திட்ட மிட்டுள்ளன. இதற்கிடையே டெல்லியில் பல இடங்களில் மேகி நூடுல்ஸ் மாதிரி சேகரிக்கப்பட்டது. அவற்றை ஆய்வு செய்த போது மேகி நூடுல்ஸ் அதிக ரசாயனத் தன்மை கொண்டிருப்பதால் சாப்பிட உகந்தது அல்ல என்று தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மேகி நூடுல்சை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம் மீது வழக்கு தொடர டெல்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது இன்று டெல்லி யில் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களை நெஸ்லே நிறுவன அதிகாரிகள் சந்தித்து பேசினர் கூட்டத்தில் மேகி நூடுல்சில் சேர்க்கப்படும் ரசாயன பொருள் பற்றி விரிவான விவாதம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு மேகி நூடுல்சுக்கு டெல்லியிலும் தடை விதிக்கபட்டது. நெஸ்ட்லேவின் மேகி நூடுல்சுக்கு பலவேறு மாநிலங்களில் தடை விதிக்கபடுவதை தொடர்ந்து நெஸ்ட்லே இந்தியாவின் பங்குகள் 10 சதவீதம் விழ்ச்சி அடைந்துது உள்ளது
-Daily thanthi

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...