Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 05, 2015

உலக சுற்றுச்சூழல் தினம்: உலகில் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் இந்தியாவின் 13 நகரங்கள்

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும்.

இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் 20 பட்டியலில் இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி உள்பட 13 நகரங்கள் இடம்பெற்று உள்ளன. இந்த 13 நகரங்களில் குஜராத்தின் வபி,ஒடிசாவின் சுகிண்டா ஆகியவை உலகின் மிகவும் மோசாமான் மாசுபட்ட நகரங்களின் 10 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்று உள்ளது. மிகவும் மாசு பட்ட நகரங்கள் பட்டியலில்
சீனாவின் 3 நகரங்கள் இடம் பெற்று உள்ளன. மேலும் உலகின் மாசு பட்ட 10 நதிகளின் வரிசைபட்டியலில் கங்கை , யமுனா நதிகள் இடம்பெற்று உள்ளன. மாசுபட்ட நதிகள் பட்டியலில் சீனாவை சேர்ந்த நதிமட்டுமே இடம் பெற்று உள்ளது.

இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சி, இரு நாடுகளிலும் இருக்கும் சுற்று சூழலில் பாதிப்பை ஏர்படுத்தி வருகிறது என தெரிகிறது. கார்பனை அதிகம் வெளியிடும் நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாசுபட்ட நகரங்கள் மத்தியில் தமிழ்நாட்டின் கோயமுத்துரில் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிகிறது. இது போல் மற்ற நகரங்களையும் மாற்ற முயற்சி செய்யவேண்டும்.
-dailythanthi

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...