Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 15, 2015

சிதம்பரம் பஸ் நிலைய கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பஸ் நிலையம் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் பஸ் நிலையத்தில் இருந்த குளிர்பான கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது காலாவதியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து கடை உரிமையாளர்களிடம் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா தெரிவித்தார். அப்போது
அவருடன் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஏழுமலை, குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
source:dailythanthi

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...