Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 23, 2015

ஆதார் எண் இணைக்காத வாக்காளர்களுக்கு இறுதி அறிவிப்பு !

கடலூர் : மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் விவரங்கள் அளிக்காதவர்களுக்கு, தேவையான விவரங்களை அளிக்க வசதியாக இறுதி அறிவிப்பு நோட்டீஸ் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

தேர்தல் ஆணையம் தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி, வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் ஆதார் அட்டை எண், மொபைல் எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படுகிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று விவரங்களை சேகரித்தனர். மேலும், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டசபை தொகுதிகளில் 9 லட்சத்து 48 ஆயிரத்து 314 வாக்காளர்கள் தேவையான விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.இதில், கடந்த 19ம் தேதி வரை, 7 லட்சத்து 56 ஆயிரத்து 551 பேரின் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 763 பேரின் விவரங்கள் படிப்படியாக இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, ஆதார் அட்டை இருந்தும் அதன் விவரம் அளிக்காமல் இடம் பெயர்ந்தவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் ஆதார் எண் விவரங்களை சமர்ப்பிக்க வசதியாக அவர்களுக்கு

இறுதி அறிவிப்பு நோட்டீஸ் வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.


இதற்காக, ஆதார் அட்டை எண் அளிக்காதவர்களின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள 2, 235 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் இன்று முதல், ஆதார் எண் விவரம் அளிக்காமல் இடம் பெயர்ந்தவர்கள், வெளியூர் சென்றவர்களின் வீடுகளுக்கு சென்று, ஆதார் எண் விவரங்களை இணைப்பதற்காக இறுதி அறிவிப்பு நோட்டீஸ் வழங்க உள்ளனர். மேலும், ஆர்.டி.ஓ., அலுவலகம், நகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் எண் இணைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...