Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 14, 2013

இந்திய சுதந்திர வரலாறு -ஆங்கிலேயர் ஆட்சி!

வாஸ்கோ ட காமா 1498 ல் கடல் வழியே இந்தியாவுக்கு வழி கண்டு பிடித்தார்.இதனால் இந்திய ஐரோப்பிய வாணிகம் வளர்ச்சியடைந்தது.

போர்ச்சுகல் மக்கள் கோவா, டையூ, டாமன் மற்றும் மும்பையில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர்.இவர்களையடுத்து டச் நாட்டவர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வாணிக முகாம்களை சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர்.1619 ல் பிரெஞ்சு காரர்களும் அவர்களை பின் தொடர்ந்தனர்.உள்ளுக்குளே நடந்த போர்களும், குழப்பங்களும் ஐரோப்பியர் தேடிக்கொண்டிருந்த நுழைவு வாயிலாக அமைந்தன. இதன் மூலம் அவர்கள் அரசியல் ஆதிக்கத்தையும் செலுத்த ஆரம்பித்தனர்.

ஆங்கிலேயர் அரசாட்சி:
மற்ற எல்லா ஐரோப்பியா நாடுகளும் தங்களது வசம் இருந்த பகுதிகளை ஆங்கிலேயரிடம் நாளடைவில், அதாவது இந்த ஒரே நூற்றாண்டில் இழந்தனர். இதற்கு விதிவிலக்காக பிரெஞ்சு நாட்டவர்களின் பாண்டிசேரி, சந்தேர்நாகூர் மற்றும் டச்சின் ட்ராவனகொர் துறைமுகமும், மற்றும் போர்ச்சுகல் நாட்டினரின் கோவா, டையூ,டாமன்  இருந்தன. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் முகலாய பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற பிறகு இந்தியாவுடன் 1617 ல், வணிகம் கொள்ள ஆரம்பித்தது நாளடைவில் அவர்களது ஆதிக்கத்தினால் சட்டப்படி இருந்த முகலாய பேரரசர் பருக் சியார் அவர்ர்களுக்கு தஸ்டக்குகள் அல்லது வரியில்லாமல் வங்காளத்தில், 1717 ல், வாணிகம் செய்ய அனுமதி வழங்கினார்.

ஆங்கிலேயருக்கு எதிராய் போரிட்ட முதல் மன்னர் நவாப் சிராஜுத்  தவ்லா:
வங்காள மாகாணத்தை தனது வம்சாவளியின் மூலம் ஆண்ட, வங்காளத்தின் நவாப் சிராஜ் உட துலாத் ஆங்கிலேயரரின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது 1757 ல் பிளாசே போருக்கு வழி வகுத்தது.
இதில் ராபெர்ட் கிளைவின் தலைமையில் சென்ற கிழக்கிந்திய நிறுவனத்தின் படை நவாபை வீழ்த்தியது.நிலங்களை அரசியல் நோக்குடன் ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்ததில் இதுவே முதல் தரமாகும்.இந்த நிறுவனம் ராபர்ட் கிளைவை முதல் வங்காள ஆளுநராக 1757 ல் நியமித்தது.1764 ல் பக்சார் போருக்கு பின்னர் வங்காளத்தை ஆட்சி செய்ய முகலாய பேரரசர் ஷா அலாம் II இடமிருந்து அனுமதிப்பெற்றது. இதுவே இந்தியா முழுதும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வர முதல் படியாக இருந்தது.

வங்காளத்தின் வணிகத்தை தான் மட்டுமே கையாண்டது கிழக்கிந்திய நிறுவனம்.அவர்கள் ஒரு புது நில வரியை அறிமுகப்படுத்தினர். பெர்மனென்ட் செட்டில்மென்ட் என்ற இதன் வழியாக நிலங்கள் பியூடல் முறையில் கையாளப்பட்டன.1850 முடிவகளில் கிழக்கிந்திய நிறுவனம் இந்திய துணைகண்டத்தின் பெரும்பாலான பகுதிகளை (இன்றைய பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம்) தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.அவர்கள் பிரித்து ஆள் என்ற கொள்கையை தீவிரமாகப் பயன்படுத்தினர். அரசர்களால் கட்டுபடுத்தப்பட்ட மாநிலங்களுக்கும், சமுக மற்றும் மத சார்ந்த குழுக்களுக்கும் இருந்த பகைமையை இவர்கள் மிகவும் அறிவு பூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆங்கிலேயரின் அரசாட்சியின் பொழுது, அரசாங்கத்தின் சொல்லப்படாத கொள்கைகளால் இந்தியாவில் பஞ்சங்கள் உருவாகின. மிக கொடுமையான பயங்கர பஞ்சம் (கிரேட் பாமின் ஆப் 1876–78), 6.1 மில்லியனிலிருந்து 10.3 மில்லியன் மக்கள் வரை கொன்றது.

அதனை தொடர்ந்த இந்தியன் பாமின் ஆப் 1899–1900, 1.25 இலிருந்து 10 மில்லியன் மக்கள் வரை சரித்து. மூன்றாம் பிளக் பாண்டமிக் தனது ஆதீனத்தை சீனாவில் கொண்டிருந்தது. மத்திய 19 ஆம் நூற்றாண்டில் துவங்கிய அது கண்டங்கள் முழுதும் அல்லது இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் மக்களை கொன்றது.இந்த பஞ்சங்களும் வியாதிகளும் அதிகரித்த போதிலும் இந்திய துணைகண்டத்தின் மக்கள் தொகை 1750 ல் 125 மில்லியனாக இருந்து,1941 ல் 389 மில்லியனாக மாறியது .

முகாலாய பேரரசர் பகதூர் ஷா சபர் தலைமையில் முதல் போர்: 
கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்து நடந்த முதல் இயக்கம் 1857
இந்திய கலகம் என்று பெயர் பெற்றது.இதனை இந்தியன் மியூடினி என்றும் சிபாய் மியூடினி என்றும் சுதந்திரத்தின் முதல் போர் என்றும் அழைப்பர்.ஒரு வருடத்துக்கு பிறகு, மிகுந்த நடவடிக்கைகள் எடுத்த பிறகுதான் இந்த கழகத்தை ஆங்கிலேயர்களால் கட்டுப்படுத்த முடிந்தது.இந்த கலகத்திற்கு மானசீக தளபதியாக விளங்கிய முகாலாய பேரரசர் பகதூர் ஷா சபர் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதனால் முகலாய வம்சாவழியே ஒழிக்கப்பட்டது.இதன் காரணமாக கிழக்கிந்திய நிறுவனத்திலிருந்து பொறுப்பை தன்னிடம் ஆங்கிலேய முடியாட்சி மாற்றி கொண்டது. இது இந்தியாவில் ஒரு குடியேற்ற நாடாகவே பார்த்து. இது நிறுவனத்தின் கீழ் இருந்த நிலங்களை வெளிப்படையாகவும் மற்ற நிலங்களை அரசர்கள் கீழ் மாநிலங்கள் என்ற போர்வை கீழ் மறை முகமாகவும் ஆட்சி செய்தது.

ஆங்கிலேயரிடமிருந்து ஆகஸ்ட் 1947 ல் விடுதலைப்பெற்ற இந்தியாவில் மொத்தம் 565 அரசர்களால் ஆளப்பட்ட மாநிலங்கள் இருந்தன.
-நன்றி :ta.wikipedia

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...