Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 26, 2013

சிதம்பரம் நகரில் வாகன நிறுத்தங்கள் முறைப்படுத்தப்படுமா?

சிதம்பரம் நகரில் முறையான வாகன நிறுத்தங்கள் இல்லாததால் வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசலை உண்டாக்குகிறது.

சிதம்பரம் நகரில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மினி லாரிகளும் இயக்கப்படுகின்றன. இவை, சாலைகளில் ஒரு வழிப்பாதையைக் கடைபிடிக்காமல் குறுக்கும், நெடுக்குமாக எவ்விதக் கட்டுப்பாடுமின்றி இயக்கப்படுகின்றன. இதனால் சிதம்பரம் நகரில் சீரானப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேல வீதி மற்றும் தெற்குரத வீதி உள்ளிட்ட இடங்களில் சாலைகளின் நடுப்பகுதி வரை ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கீழரதவீதியில் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வாகன நிறுத்தங்கள் இல்லை... சிதம்பரம் நகரில் மேலரத வீதி, தெற்குரத வீதி, வேணுகோபால்பிள்ளைத் தெரு, எஸ்.பி.கோயில் தெரு ஆகியப் பகுதிகளில் ஏராளமான வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் உள்ளன. எனவே இப்பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். ஆனால், இங்குள்ள ஹோட்டல் மற்றும் வணிக வளாகங்களில் முறையான வாகன நிறுத்தங்கள்
அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு வருபவர்கள், சாலையிலேயே தங்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர்.இதனால் அப்பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

எனவே போக்குவரத்து காவல்துறையினர், நகரில் ஒரு வழிப்பாதை முறையை அமல்படுத்த வேண்டும். மேலும் முறையான வாகன நிறுத்தங்களை ஏற்படுத்தி, சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றி சீரானப் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-Dinamanai

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...