Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 20, 2013

அமைச்சர்கள், விஐபிக்கள் வாகனங்களில் சிவப்பு சைரனை அகற்ற வேண்டும் - உச்சநீதிமன்றம்

அமைச்சர்கள், விஐபிக்கள் உள்ளிட்ட அனைவரது வாகனங்களிலும் சிவப்பு சைரன்  பயன்படுத்துவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மற்றபடி, அரசியல் சட்ட பதவிகளில் உள்ளவர்கள் மட்டுமே வாகனங்களில் சைரனை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கார்களில் சைரனை பயன்படுத்துவதை முறைப்படுத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, வி.கோபால கவுடா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய உள்துறை அமைச்சராக இருப்பவர்கள், கார்களில் சிவப்பு சைரன் விளக்கு பொருத்திக் கொள்ள அனுமதி உள்ளது. ஆனால், ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தபோது, தனக்கு சிவப்பு சைரன் விளக்கு, பாதுகாப்பு வாகனங்கள் எதுவும் தேவையில்லை என்று மறுத்தார். முரண்பட்டதாக இருந்தாலும் இது உண்மையான கூற்று.

இப்படி உயர் பதவியில் இருந்த அவரே மறுத்துள்ளபோது, சைரனை அமைச்சர்களும், விஐபிக்களும் பயன்படுத்த அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்? மக்கள்தான் அரசுக்கு வரிக்கு செலுத்துகின்றனர். அவர்கள்தான் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில், அவர்களும் கார்களில் சிவப்பு சைரன் விளக்கை பயன்படுத்த ஏன் அனுமதிக்கக்கூடாது? இந்த விஷயத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க 4 வார காலம் அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிமன்றங்களின் உத்தரவுகளை எல்லாம் அரசு புறக்கணித்து வருகிறது. உடனடியாக விஐபி வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களிலும் சைரனை நீக்க வேண்டும். மேலும், சிவப்பு விளக்குகளை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இது ஆங்கிலேயர் ஆட்சிக்கால பிரதிபலிப்பாக உள்ளது.

அரசியல்சட்ட பதவியில்
உள்ளவர்கள் மட்டுமே சைரன் பொருத்திய சிவப்பு விளக்கை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மற்ற யாரும் அதை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு சிவப்பு சைரன் விளக்கு பொருத்திய காரை அளித்தது எதற்காக? ஒவ்வொரு முறையும் சாலையில் சிவப்பு சைரன் விளக்கு பொருத்தப்பட்ட கார்களை பார்க்கும்போது எல்லாம் நாங்கள் ஆயிரக்கணக்கான முறை உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...