Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 27, 2013

சிதம்பரத்தில் இரு போலி மருத்துவர்கள் கைது!!

சிதம்பரம் நகரில் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்த போலி மருத்துவர்கள் இருவரை டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையிலான தனிப்படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

சிதம்பரம் நகரில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சையளிப்பதாக டி.எஸ்.பி. ராஜாராமுக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து தீவிர சோதனை மேற்கொண்டார். அப்போது மருத்துவம் படித்த சான்றிதழ் இல்லாமல் சிதம்பரம் வேங்கான்தெருவில் கிளினிக் மற்றும் மருந்துக் கடை வைத்து சிகிச்சை அளித்து வந்த சங்கர் (38), பொன்னம்பல நகரில் மருந்துக் கடை வைத்து சிகிச்சையளித்து வந்த சரவணன் (38) ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து மருந்துகள், மாத்திரைகள் மற்றும் சிரஞ்சுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். போலீஸார் விசாரணையில் போலி டாக்டர் சங்கர் 10-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார் என்பதும், மற்றொருவரான
சரவணன் டி.ஃபார்ம் படித்துள்ளார். இவர் தனது தந்தை பாலு ஹோமியோபதி மருத்துவராக இருந்ததால் அவரிடம் பெற்ற அனுபவத்தினால், தந்தை இறந்த பின்பு சரவணன் டாக்டர் போல் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்துள்ளார் என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...