Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 01, 2013

துபாயின் ரியல் எஸ்டேட் துறையில் இந்தியர்கள் ஆதிக்கம்!

நடப்பு நிதியாண்டின் முதல் அரை இறுதியில், துபாயின் ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டாளர்களின் கணக்கீடு குறித்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் துறையில் மொத்த மூலதன மதிப்பீடு 877.5 பில்லியன் என்று நிலத்துறை கணக்கீடு தெரிவிக்கின்றது. இதில் இந்தியர்களின் முதலீடாக 132.6 பில்லியன் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவே, இந்தியர்களின் சென்ற வருடத்திய மொத்த முதலீடு 149 பில்லியனாக இருந்துள்ளது.

இந்தியர்கள் தவிர, பாகிஸ்தானியர்களின் முதலீடு 49.7 பில்லியனாகவும், இங்கிலாந்து நாட்டினரின் முதலீடு 66.3 பில்லியனாகவும் உள்ளது. துபாயின் ரியல் எஸ்டேட் சந்தை அதன் ஸ்திரத்தன்மை, பலதரப்பட்ட வளர்ச்சி மற்றும் உயர் முதலீட்டு வருவாய் போன்றவற்றின் அடிப்படையில் வளர்ந்து வருகின்றது. இதனால், உலகளாவிய நெருக்கடி நிலையில்கூட இதன் விற்பனை பாதிக்கப்படுவதில்லை. இந்த சாதகமான சூழ்நிலைகள் உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கின்றது என்று இத்துறையின் இயக்குனர் ஜெனரல் சுல்தான் புட்டி பின் மெஜ்ரின் குறிப்பிடுகின்றார்.

 ஆண்டு முழுவதும் துபாய் அரசு செயல்படுத்திய பல்வேறு கொள்கைகள், முயற்சிகளின் விளைவே முதலீட்டாளர்களிடம் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாட்டினரும் செய்யும் முதலீடுகள் பத்திரமாகவும் பின்னர் லாபமளிக்கக்கூடிய விதத்திலும் அவர்களுக்கு பயன்படுவது இத்துறையின் வெற்றிக்கு காரணமாகின்றது என்றும் அவர் கூறினார். மெகா திட்டங்களுக்கும், லாபகரமான முதலீட்டு
வாய்ப்புகளுக்கும் தொடர் விளம்பரங்கள் மூலம் துபாய் அரசு முதலீட்டாளர்களை ஈர்க்கின்றது என்றும் பின் மெஜ்ரின் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...