Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 07, 2013

காட்டுமன்னார்கோவில் பகுதியில் மண்ணெண்ணெய் விநியோகம் குறைவால் அவதியுறும் மக்கள்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் ரேஷன் கடை களில் குறைந்த அளவே மண்ணெண்ணெய் விநி யோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் காலையிலிருந்தே வெயி லில் காத்திருந்து வாங்க வேண்டிய நிலையில் உள் ளனர். இந்த பகுதியில் சுமார் 77 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளது. குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் கடைகளில் பல்வேறு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு மண்ணெண்ணெயின் அளவை குறைத்துள்ளதால் ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவை விட குறைத்து வழங்கப்படுகிறது. இதை ரேஷன் கடைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ஆதலால் மண்ணெண் ணெய் விநி யோகம் செய்யப்படும் நாட் களில் யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கே மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மண்ணெண்ணெய் கிடைப் பதில்லை. இதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யும் நாட் களில் கடையின் முன்பு விடியற்காலையிலேயே
காத்திருந்து வாங்கி செல்கின்றனர். சில கடைகளில் நள்ளிரவில் இருந்து காத்திருந்து மண்ணெண்ணெய் வாங்கும் அவல நிலையும் உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...