Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 12, 2013

மெட்ரோ ரயில் திட்டம் 6.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்க பணி நிறைவு!

சென்னை மெட்ரோ என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்து தேவைக்காக வரைவு செய்யப்பட ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் கட்டப்படும்.

மேல்வாரியாக, இத்திட்டம் "சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தை" ஒத்திருந்தாலும், இத்திட்டத்தின்படி இயங்கும் தொடருந்துகள் புது தில்லி மெட்ரோ திட்டத்தை ஒத்து இருக்கும். இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் இரண்டு வழித்தடங்கள் கட்டப்பட உள்ளன. முதல் கட்டப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டு, கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. 2014-2015 ஆம் ஆண்டு வாக்கில் இத்திட்டத்தின் கட்டுமானம் முடிவுற்று பொதுப் போக்குவரத்திற்கு திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை, சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை என மொத்தம் 45 கிமீ தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில் 24 கிமீ தூரம் சுரங்கப்பாதையில் ரயில் செல்கிறது. சுரங்கப்பாதையில் மட்டும் 19 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பூமிக்கு அடியில் ரயில் பாதை அமைக்க சுரங்கம் தோண்டும் பணி சென்னையில் முதலாவதாக நேரு பூங்காவில் 2012ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி தொடங்கியது. சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 11 டனல் போரிங் மிஷின் மூலம் பூமிக்கு அடியில் 20 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அதன்படி நேரு பூங்கா, வண்ணாரப்பேட்டை, மே தின பூங்கா, சைதாப்பேட்டை, ஷெனாய்நகர் பகுதியில் முழு வேகத்தில் சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. சுரங்கத்தில் இரு வழித்தடங்களில் தனித்தனியாக ரயில் செல்லும் வகையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. ரயில் நிலையத்தில் மட்டும் இரண்டு ரயில்களும் சந்திக்கும். மற்ற இடங்களில் ஒரு ரயிலுக்கும் அடுத்த பாதையில் செல்லும் ரயிலுக்கும் சுமார் 15 மீட்டர் இடைவெளி இருக்கும் வகையில் தனித்தனி சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. சுரங்கம் தோண்டும் பணி துவங்கி தற்போது ஒரு ஆண்டு முடிவடைகிறது. இந்த ஒரு ஆண்டில் மெட்ரோ ரயில் செல்வதற்காக 6,500 மீட்டர் அதாவது 6.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணி
முடிந்துள்ளது.

நேரு பூங்கா மற்றும்  எழும்பூர் இடையே 948 மீட்டர் தூரம் சுரங்கம் தோண்ட வேண்டும். நேற்றுவரை இந்த பாதையில் 50 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளது. அதேநேரம் வண்ணாரப்பேட்டை மற்றும்  எழும்பூர் இடையே பணி துவங்கிய 6 மாதத்தில் சுமார் 1,500 மீட்டர் பணி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...