Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 25, 2013

டிராவல் மற்றும் சுற்றுலா மேலாண்மையில் முதுநிலை படிப்பு!!

என்ன நடந்தாலும் சரி, மக்கள் பயணிப்பதை மட்டும் நிறுத்தவே மாட்டார்கள். வளர்ந்த நாடாயினும் சரி, வளரும் நாடாயினும் சரி, சுற்றுலா மற்றும் உபசரிப்பு துறை நல்ல வருமானம் தரும் ஒன்றாக இருக்கிறது. இன்றைய நிலையில், அத்துறையின் மொத்த மதிப்பு, தோராயமாக 1,800 கோடி டாலர்கள். மேலும், ஏறக்குறைய 10 கோடி மக்கள் இத்துறையில் பணிபுரிகிறார்கள் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

இதுதவிர அடுத்த 10 ஆண்டுகளில் 6.5 கோடி புதிய பணி வாய்ப்புகள் இத்துறையில் ஏற்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிராவல் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பின் நோக்கம் சுற்றுலா மற்றும் உபசரிப்பு தொழில்களில் நடுநிலை அளவிலான மற்றும் உயர்நிலை அளவிலான மேலாளர்களை இப்படிப்பு உருவாக்குகிறது. மேலாண்மை நுட்பங்களைப் பற்றிய பிராக்டிகல் அம்சங்கள் மட்டுமின்றி, தேவையான தியரி அம்சங்களையும் கொண்டதாக இப்படிப்பு திகழ்கிறது. இந்த வகையில், இப்படிப்பு வேறுசில பொது மேலாண்மை படிப்புகளைவிட வேறுபட்டு நிற்கிறது.

சுற்றுலா மற்றும் உபசரிப்பு தொழில்துறையில் புதிதுபுதிதாக ஏற்படும் தேவைகள் மற்றும் சவால்களை திறம்பட சமாளிக்கும் வகையிலான நிபுணர்களை உருவாக்குவது இப்படிப்பின் நோக்கம். ஒருவர் கல்வி நிறுவனப் பணியில் இருந்தாலும் சரி அல்லது நடைமுறை தொழில்துறையில் இருந்தாலும் சரி அவர்கள் இருவருக்கும் சுற்றுலா மற்றும் உபசரிப்பு துறையில் ஆராய்ச்சிகளை
மேற்கொள்ள எந்த தடையுமில்லை. 

முதுநிலையில் வழங்கப்படும் டிராவல் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பின் சிறப்பம்சமே நிஜ தொழில்துறை தேவைகளுக்கு ஏற்றவகையில் இதன் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருப்பது. எனவே, இப்படிப்பை அக்கறையுடனும், கவனத்துடனும் மேற்கொள்ளும் ஒருவர், படித்து முடித்தவுடன், வேலைக்கான முழு தகுதிகளுடன் வெளிவருவார். இப்படிப்பின்போது டிராவல் ஏஜென்சிகள், சுற்றுலா இயக்கம், அக்கவுன்டிங், மார்க்கெடிங், தொழில்முனைதல், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஆளுமைத்திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களைப் பற்றி படிக்கிறார்கள்.

இரண்டாம் ஆண்டில், travel agency and tour operation management,
 eco - tourism,
sustainable tourism,
rural tourism, event management,
civil aviation and airlines,
hotel operations and management,
food and beverage management,
cargo management,
entrepreneurship in tourism and hospitality ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் ஸ்பெஷலைசேஷன் மேற்கொள்ள வேண்டும். சில கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, கடைசி செமஸ்டர் காலகட்டம் முழுவதும் தொழில்துறை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், சில கல்வி நிறுவனங்களில் வேறு செமஸ்டர் காலகட்டங்களில் இவற்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

சுற்றுலா நிபுணர்கள் செய்வது என்ன? சுற்றுலா, விடுமுறை மற்றும் வணிக காரணங்களுக்காக, தங்களின் வீடுகளையும், சொந்த ஊர் மற்றும் நாடுகளையும் விட்டு பிரிந்துவரும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதே இத்தொழிலின் முக்கிய அம்சம். இத்துறையில், ஒருவர் எந்த நிலையில் பணியாற்றினாலும், அவர் மக்களோடு நேரடியாக தொடர்பு கொள்கிறவராக இருக்கிறார் என்பது முக்கிய அம்சம். டிராவல் ஏஜென்டுகள், சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை மதிப்பிட்டு, திருப்திப்படும் வகையிலான சிறந்த ஏற்பாட்டை செய்வது அவர்களின் கடமை. டிராவல்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள், தற்போதைய விதிமுறைகளைப் பற்றிய விஷயங்களை மனதில் ஏற்றிக்கொள்வதுடன், கார்கோ, டிக்கெட்டிங், பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவற்றுக்கு தேவையான ஆவணங்களைப் பற்றி தெரிந்து வைத்து, தங்களை நாடிவரும் வாடிக்கையாளர்களுக்கு சரியான ஆலோசனைகளை வழங்குவது இவரின் கடமை.

மேலும், தேவைப்படும் இடத்தில் paper work சம்பந்தமான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும், சுற்றுலாப் பயணிகள் விரும்பி செல்லக்கூடிய இடங்களைப் பற்றி பலவிதமான விஷயங்களை நன்றாக தெரிந்து வைத்திருப்பதோடு, அந்த இடத்தை, சாலைவழி, ரயில் வழி மற்றும் நீர் வழி மற்றும் வான்வழி ஆகியவற்றின் மூலம் எப்படி அடைவது என்பதைப் பற்றியும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். வெற்றிக்கு வழி இத்துறையைப் பற்றி பேசும் பலபேர், தாங்கள் பலரிடமும் எளிதாக சென்று கலந்துரையாட விரும்புபவர்கள் என்று சொல்வார்கள். அதனால்தான் சுற்றுலா மற்றும் உபசரிப்பு துறைக்கு செல்ல விரும்புவதாகவும் அவர்கள் கூறுவார்கள். இவ்வாறு நினைத்துப் பார்ப்பதற்கு எளிதாகத்தான் இருக்கும். ஆனால் நடைமுறையில் நாம் அந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது கூச்சமாகவும், தயக்கமாகவும் உணர்வோம். ஆனால், அந்தப் பண்புதான் மிகவும் முக்கியமானது.

முதலில், விருந்தினர்களுக்கு வாழ்த்துச் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், அவர்களை குறைவின்றி உபசரிக்கும் தன்மையையும், ஆர்வத்தையும் இயல்பாகவே பெற்றிருக்க வேண்டும். எந்த ஒரு நாடாக இருந்தாலும், சுற்றுலா மற்றும் உபசரிப்பு துறையானது, அதிக வருமானம் தரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. அத்துறை, தனக்குள் ஏராளமான வேலை வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. எனவே, உங்களுக்கு பொருத்தமானது எது என்பதை தேர்ந்தெடுப்பது, உங்களின் கைகளில்தான் உள்ளது.

முதுநிலை டிராவல் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்
 Kurukshetra university
Maharishi dayanand university

இப்படிப்பு தொடர்பான இதர படிப்புகள் :
MBA in hotel hospitality &
tourism administration at SRM institute of hotel management - Mylapore, Chennai. *
Master of tourism administration, Christ university *
MA - Tourism administration, Amity university

தகுதி:  ஏதேனுமொரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மாணவர் சேர்க்கை முறை நுழைவுத்தேர்வு, தனிப்பட்ட நேர்முகத்தேர்வு, தகுதித்தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்கள் ஆகியவை கணக்கில் எடுக்கப்படும். வேலைவாய்ப்பை வழங்கும் சில முக்கிய நிறுவனங்கள்
Travel agencies, Tour operators (online and offline),
Event management firms,
Government organisations, Hotels, Resorts, Airlines, Academic institutions,
Independent professional guide,
Immigration and customs service, Tourism promotion and sales firms.

நன்றி:தினமலர் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...