Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 15, 2013

வறுமையை அகற்றுவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்-ஜனாதிபதி சுதந்திர தின உரை

இந்தியாவின் 67–வது சுதந்திர தின விழா இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.அப்போது அவர் கூறியதாவது:–

ஊழல் பிரச்சினை நமது ஜனநாயக அமைப்புகள் தேசத்தின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக விளங்குகின்றன. நமது பாராளுமன்றமும், சட்டசபைகளும் சட்டம் இயற்றுதல், விவாதம் நடத்துதல் ஆகியவற்றை விட சண்டை நடக்கும் அரங்கங்கள் போல் காணப்படுகின்றன. அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்புகளுக்கும் நமது அரசியல் சட்டம் தனித்தனி அதிகாரங்களை வழங்கி இருக்கிறது. அந்த அதிகார வரம்புகளுக்குள் அவை செயல்பட வேண்டும். விவாதங்கள் நடைபெற்று முடிவு காணப்பட நமக்கு பாராளுமன்றம் தேவை.

தாமதம் இன்றி நீதி வழங்க நமக்கு நீதிமன்றங்கள் தேவை. ஊழல் நமக்கு பெரும் சவாலாக உள்ளது. நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடித்து மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.அடுத்த சுதந்திர தினவிழாவை சந்திப்பதற்கு முன்னால் நமது நாடு பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளது. நமது குடியாட்சியின் மிகச்சிறந்த இந்த பெரிய விழாவில் நாம் அனைவரும் பங்கேற்று நிலையான அரசை தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு நம்முன்னே உள்ளது. நிலையான அரசு ஏற்படுவதன் மூலம் நாட்டின் பாதுகாப்பும், பொருளாதார வளர்ச்சியும் உறுதி செய்யப்படும். சமூக நல்லிணக்கம், அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கிய நமது பயணத்தில் தேர்தல் ஒரு முக்கிய மைல் கல் ஆகும்.

கல்வி முறையின் மூலம் சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வரமுடியும். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்று இல்லாமல் உலக சக்தியாக மாறுவதை கனவு காணமுடியாது. உலகின் விரைவான வளர்ச்சியை கொண்ட நாடாக கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உருவெடுத்து உள்ளது. நாட்டின் பாதுகாப்பு நாம் இன்று உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவை பெற்றுள்ளோம். வறுமையை அகற்றுவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு,
உணவு தானியம், தகவல் ஆகியவற்றை குடிமக்கள் பெறுவது சட்டபூர்வ உரிமை ஆக்கப்பட்டு உள்ளது.

அண்டை நாடுகளுடன் தொடர்ந்து நட்புறவை வளர்ப்பதற்கு இந்தியா முயன்று வருகிறது. அதே வேளையில் எல்லைப்பகுதியில் நடந்த துப்பாக்கிசூடுகள் காரணமாக ஏற்பட்ட உயிர் இழப்புகள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அமைதியை நோக்கிய நமது முயற்சிகள் தோல்வி அடைந்து விடவில்லை. இருப்பினும் நமது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. உள்நாட்டு பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், நமது தேசத்தின் ஒற்றுமை, பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

மகாத்மா காந்தி மகாத்மா காந்தி கண்ட கனவுகளை நனவாக்க வேண்டும். அதற்கான முயற்சியை உண்மையான அக்கறையுடன் மேற்கொள்வதுடன் நேர்மை, தியாக உணர்வுடன் பாடுபட வேண்டும். கொள்கை இல்லாத அரசியல், உழைப்பில்லாமல் வரும் செல்வம், ஒழுக்கமில்லாத கல்வி, நேர்மையற்ற வியாபாரம், மனிதாபிமானம் இல்லாத அறிவியல், தியாகம் இல்லாத வழிபாடு ஆகிவற்றை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறி இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.அவரது போதனைகளை ஏற்று நவீன ஜனநாயகத்தை படைக்க வேண்டும்.

தேசபக்தி, கருணை, சகிப்புத்தன்மை, சுயகட்டுப்பாடு, நேர்மை, ஒழுக்கம், பெண்களை மதித்தல் ஆகிய பண்புகளுடன் ஒவ்வொருவரும் சிறந்து விளங்க வேண்டும்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...