Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 14, 2010

மரணத்தருவாயில்…

நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்!

“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும்,
நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள்
மீட்கப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 21:35)
“மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது; (அப்போது அவனிடம்) நீ எதை
விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)”
(அல்-குர்ஆன் 50:19)

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!” (அல்-குர்ஆன் 4:78)

மலக்கல் மௌத் உங்களின் உயிர்களைக் கைப்பற்றுவார்!

“அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் – அவர்கள் (தம் கடமையில்)
தவறுவதில்லை” (அல்-குர்ஆன் 6:61)

மரணத்தருவாயில் பாவமன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது!

“இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை
மரணம் நெருங்கிய போது, ‘நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி)
மன்னிப்புத் தேடுகிறேன்’ என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே
மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம்
கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்” (அல்-குர்ஆன் 4:18 )

அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனைச் செய்யும் அநியாயக்காரர்களின் உயிரை மலக்குகள்
கைப்பற்றும் வேளையில்!

“அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, ‘எனக்கு வஹீ வந்தது’ என்று கூறுபவன்; அல்லது ‘அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்’ என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ‘உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்;

இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய
வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்’ (என்று கூறுவதை நீர் காண்பீர்)” (அல்-குர்ஆன் 6:93)

மலக்குகள் நிராகரிப்பவர்களின் உயிர்களைக் கைப்பற்றுகின்ற வேளையில்!

“மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள்
பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: ‘எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்’ என்று” (அல்-குர்ஆன் 8:50)

சமீபமாக இருக்கும் அல்லாஹ்!

“மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது – அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை. எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் – நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!” (அல்-குர்ஆன் 56:83-87)

மரணத்தருவாயில் அவகாசம் அளிக்கப்படமாட்டாது!

“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு
திரையிருக்கிறது” (அல்-குர்ஆன் 23:99-100)

நீங்கள் எந்த மரணத்தைக் கண்டு அஞ்சுகிறீர்களோ அந்த மரணம் உங்களை அடைந்தே தீரும்!

“‘நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் – அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்’ (என்று) (நபியே!) நீர் கூறுவீராக” (அல்-குர்ஆன் 62:8)

மரணம் வருமுன் நற்செயல்களை புரியுங்கள்!

“அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,- ‘மந்திரிப்பவன் யார்?’ எனக் கேட்கப்படுகிறது. ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான். இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும். உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது. ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன்

தொழவுமில்லை. ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான். பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் – மமதையோடு சென்று விட்டான். கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்! பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான். வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?” (அல்-குர்ஆன் 75:26-36)

“உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); ‘என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான
தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே’ என்று கூறுவான்”
(அல்-குர்ஆன் 63:10)

thanks: AHAMED& தேரிழந்தூர் ஆன்லைன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...