
ஐக்கிய அரபு குடியரசில்(UAE)வசிக்கும் இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன் சேவையை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நேற்று தொடங்கி வைத்தார்.
5 நாள் பயணமாக ஐக்கிய அரபு குடியரசுக்கு சென்றுள்ள பிரதிபா, இந்திய தொழிலாளர்கள் நல மையத்தை திறந்து வைத்தார். இந்த மையம் தொழிலாளர்களின் குறை தீர்ப்பதற்காக 24 மணி நேர தொலைபேசி சேவையை வழங்கும்.
பொருளாதார, சட்ட, மனநலம் சார்ந்த ஆலோசனைகளை இந்த மையம் வழங்கும். மற்ற வளைகுடா நாடுகளிலும் இதுபோன்ற மையம் விரைவில் திறக்கப்படும் என மத்திய வெளிநாடுவாழ் இந்தியர் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.
இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கும் நாடுகளில் ஐக்கிய அரபு குடியரசும்(UAE) ஒன்று. இங்கு வசிக்கும் 17.5 லட்சம் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் உடல் உழைப்பு தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...