Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 29, 2010

இங்கிலாந்தில் பள்ளி குழந்தைகளுக்கு திருமணம்


இங்கிலாந்தில் பள்ளி குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகும் கூட இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடைபெற்று வருகிறது. ஆனால் வளர்ச்சி அடைந்த வல்லரசு நாடான இங்கிலாந்திலும் குழந்தை திருமணம் நடந்துள்ளது.

லண்டனில் உள்ள வார்ன்டன், தொடக்கப்பள்ளியில் படிக்கும் கால்லி (6), கெதின் (5) ஆகிய குழந்தைகளுக்கு இந்த திருமணம் நடந்தேறியது.வழக்கத்துக்கு மாறான இந்த திருமண சடங்குகள் வொர்செஸ்டர் பாரிஸ் தேவாலயத்தில் நடந்தது.

இதில் பாதிரியார் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தினார். திருமணமும் பதிவு செய்யப்பட்டது. இந்த திருமணத்தில் இரு குழந்தைகளின் பெற்றோரும் கலந்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்ய தேவாலயத்துக்கு செல்ல எவர்சொடைல் கார் பரிசளிக்கப்பட்டது.

இதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. திருமணம் என்றால் என்ன? அது எப்படி நடைபெறுகிறது என்பன போன்றவற்றை அறிந்து அது குறித்து கட்டுரை எழுதுவதற்காக இதுபோன்ற திருமணத்தை நடத்தியதாக பள்ளியின் துணை தலைவர் சாரா ஆலன் தெரிவித்தார்.

திருமணம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு இரு குழந்தைகளையும் அழைத்து ஆசிரியர்கள் திருமண ஒத்திகை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி . maalaimalar.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...