Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 18, 2012

அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் சீருடை நிறம் மாறுகிறது

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வரும் கல்வி ஆண்டிலிருந்து மெரூன்- இளம் பிரவுன் நிறங்களில் புதிய சீருடை களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச சீருடைகள் வழங்கி வருகிறது. இலவச சீருடையாக மாணவர்களுக்கு காக்கி நிற அரைக்கால் சட்டையும், வெள்ளை சட்டையும் வழங்கப்பட்டு வந்தது. மாணவிகளுக்கு இளம் நீல நிறத்தில் பாவாடையும், வெள்ளை நிறத்தில் சட்டையும் வழங்கப்பட்டன. அனைத்து அரசு பள்ளிக்கூடங்களுக்கும் ஒரே மாதிரியான சீருடைகள் வழங்கவும், சீருடையின் நிறத்தை மாற்றவும் தமிழக அரசு முடிவு செய்தது.

 அதன்படி வரும் கல்வி ஆண்டில் இருந்து அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் சீருடை நிறம் மாறுகிறது. அதுமட்டுமின்றி மாணவ-மாணவி களுக்கு ஒரு ஜோடி சீருடை மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டுக்கு பதிலாக, ஒரு மாணவருக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரைக்கால் சட்டை மற்றும் மேல் சட்டையும், 5ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவிகளுக்கு பாவாடை யும், சட்டையும் வழங்கப்படுகிறது. 6ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டை இனிமேல் கிடையாது. அதற்கு பதிலாக அனைத்து மாணவர்களுக்கும் முழுக்கால் சட்டை (பேண்ட்) வழங்கப்படும்.

 அதுபோல் 6ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் சுடிதார் மற்றும் துப்பட்டா வழங்கப்படுகிறது. பாவாடை-தாவணியை விட சுடிதார் உடைதான் மாணவிகளுக்கு வசதியாக உள்ளது என்பதால் இந்த புதிய ஆடை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கான பேண்ட் மற்றும் அரைக்கால் சட்டைகள் மெரூன் நிறத்தில் தயார் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மேல் சட்டை இளம் பிரவுன் நிறத்தில் உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு சுடிதார் பேண்ட் மற்றும் டாப்ஸ் மெரூன் நிறத்திலும், துப்பட்டா இளம் பிரவுன் நிறத்திலும் உற்பத்தி செய்ய முதல்-அமைச்சர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார். இதற்காக தமிழக அரசு ரூ.368 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. வரும் ஜூன் மாதம் பள்ளிக்கூடங்கள் திறக்கும் போது மாணவ-மாணவிகளுக்கு முதல் கட்டமாக இலவச சீருடைகளை வழங்க தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இலவச சீருடை உற்பத்தி பணியை முடுக்கி விட்டு உள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...