Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 30, 2012

கொலை மிரட்டல் வழக்கு: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கைது செய்யப்படுவாரா?

காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.தாசனின் வீடு 4 நாட்களுக்கு முன்பு அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக தி.மு.க.வினர் மீது எம்.ஜி.ஆர்.தாசன் புகார் கொடுத்தார். இந்த நிலையில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி செந்தில் மற்றும் செல்வம் ஆகியோரின் வீடு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் 1000 பேர் காட்டுமன்னார் கோவில் போலீஸ்நிலையம் சென்று அ.தி.மு.க.வினர் மீது புகார் கொடுத்தனர். அப்போது எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், தி.மு.க.வினரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

 இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் 150 பேர் மீது காட்டுமன்னார் கோவில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீதும் வழக்குபதிவு செய்யப்பட் டது. அதில் கூட்டமாக வருதல், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல், கொலைமிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அதைதொடர்ந்து தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மணிகண்டன், முன்னாள் நகரமன்ற தலைவர் கணேசமூர்த்தி, பூக்கடை செந்தில், செல்வம் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்து எந்த நேரத்திலும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவரது சொந்தவூரான முட்டத்தில் தங்கியிருக்கிறார். அங்கு 150-க்கும் மேற்பட்ட
போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் வந்ததையடுத்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான தி.மு.க. வினரும் பன்னீர்செல்வம் வீட்டு முன்பு குவிந்துள்ளனர். அதேபோல காட்டுமன்னார் கோவிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூரில் இருந்து அதிரடி படை போலீசாரும் அங்கு வந்துள்ளனர். இதனால் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. பன்னீர்செல்வம் கைது செய்யப்படுவாரா? என்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனிடம் கேட்டபோதுஎந்த பதிலும் சொல்ல மறுத்துவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...