Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 23, 2012

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த கல்வி கொள்ளை!

 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு மாநில மாணவர்களும் வெளிநாட்டு மாணவர்களும் படிக்கிறார்கள். இக்கல்லூரியில் சேருவதற்கு கல்விக்கட்டணம் இல்லாமல் நன்கொடை என்ற பெயரில் பல இலட்சங்கள் செலவாகிறது.

 சீட் வாங்கி தருகிறேன் என்ற பெயரில் நன்கொடை பணம் பெறுவதற்கு இக்கல்லூரியில் உயர் பேராசிரியர்கள் முதல் இக்கல்லூரியில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர் வரை கொள்ளை லாபம் அடைந்து வருகிறார்கள். 

ஏழை மாணவர்கள் தங்கள் நிலங்களையும் நகைகளையும் விற்றும் வட்டிக்கு கடன் பெற்றும் தங்கள் பிள்ளைகள் இன்ஜினியர் டாக்டர் மற்றும் உயர் பொறுப்புக்களுக்கு வரவேண்டும் என்ற ஆசையில் இங்கிருக்கும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களான புரோக்கர்களிடம் கல்லூரி சீட்டுக்காக பணத்தை கொடுக்கின்றனர். சீட் வாங்கி தருகிறேன் என கூறி பல லட்சங்களை பெற்று கொண்டு ஏமாற்றி விடுவதால் வருடந்தோறும் நூற்றுக்கணக்கானோர் ஏமாற்றப்படுவது வாடிக்கையாகவே உள்ளது.

கஷ்டப்பட்டு கடன்பட்டு கொடுத்த பல லட்சங்கள் ஏமாற்றப்படுவதால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். பலர் மன நோயாளியாக மாறிவிடுகின்றனர். உயர்மட்டம் வரை பங்கு போவதால் இது போன்ற கொள்ளைகளை பல்கலைகழக நிர்வாகம் கண்டுகொல்வதில்லை. 

திருவாரூர் மாவட்டம் நாச்சிபுரத்தை சேர்ந்த அன்வர்தீன் என்பவர் தனது மகன் சித்திக் ஜாசிமின் மருத்துவ படிப்பிற்கான சீட்டு கேட்டு இக்கலூரிக்கு வந்துள்ளார்.

சீட் இல்லை ஆனால் பேராசிரியர்களிடம் கேட்டு பாருங்கள் என அங்கிருந்தவர்கள் கூறி உள்ளனர்.  தனது நண்பரும் திருவாரூர் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் எவ. கருணாநிதி அவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை செய்துள்ளார்அன்வர்தீன்.  எவ.கருணாநிதி தனக்கு தெரிந்த அண்ணாமலை பல்கலைகழகப் பேராசிரியர் கருப்பையன் என்கிற செல்வராஜ் (பொருளியில் துறை ) அவர்களும் அவருடைய மனைவி சுபாஷினி (கணினி துறை ) அவர்களும் பேராசிரியர்களாக இருக்கிறார்கள் அவர்களை கேட்டுப்பாருங்கள் என கூறினார்.
 
செல்வராஜை தொடர்புகொன்டு அன்வர்தீன் கேட்டபோது: 

சீட் உள்ளது ஆனால் 26 லட்சம் ரூபாய் ஆகும் என கூறி உள்ளார்.  தன் மகன் டாக்டராக ஆசை பட்டுவிட்டாரே அதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையில் கடன் பெற்று சிலவற்றை விற்று 4 தவணையாக முதலில் 13 லட்சமும், அடுத்து 7 லட்சமும் அடுத்து 3 .75 லட்சமும் கடைசியாக 2 .25 லட்சமும் என மொத்தம் 26 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

அதன்பின் கல்லூரியிலிருந்து நேர்முக தேர்வுக்கான கார்டு வந்துள்ளது. அந்த நேர்முக தேர்வில் நல்ல முறையில் எதிர் கொண்டுள்ளார் மாணவர் அட்மிசன் போடணும் 5 லட்சம் ஆகும் என நேர்முக தேர்வில் கூறியுள்ளனர்.

அந்த பணத்தையும் தயார் செய்துவிட்டு அட்மிசன் கார்டிற்காக காத்திருந்தனர். ஆனால் அட்மிசன் கார்ட் வரவில்லை ஏன் அட்மிசன் கார்டு வர வில்லை என்று பல்கலைகழக நிர்வாகத்தை கேட்டபோது நீங்கள் கொடுத்த நன்கொடை தொகை பல்கலைகழக நிர்வாகத்திற்கு வந்து சேரவில்லை என கூறினர்.

நன்கொடை பணத்தை பெற்ற செல்வராஜிடம் இதுபற்றி கேட்டபோது 2வது பேட்ஜில் சீட் கண்டிப்பாக கிடைத்துவிடும் என கூறி உள்ளார். ஆனால் 2 வது பேட்ஜிலும் சீட் இல்லை என்றவுடன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொடுத்த 26 லட்சங்களை திருப்பி கேட்டுள்ளார் அன்வர்தீன்.

நான் அந்த பணத்தை தமிழ் பேராசிரியர் கொளஞ்சி இடம் கொடுத்துள்ளேன் ஒரு மாதத்திற்குள் கொடுத்து விடுகிறேன் என செல்வராஜ் கூறி உள்ளார்.

பின் ஒரு மாதம் கழித்து போய் பணம் கேட்டதற்கு முதற்கட்டமாக 6 லட்ச ரூபாயை வைத்துகொள்ளுங்கள் மீதி பணம் 20 லட்ச ரூபாயை 2 மாதத்திற்குள் கொடுத்து விடுகிறேன் என மீண்டும் அவகாசம் கேட்டுள்ளார் செல்வராஜ்.

அந்த 2 மாதம் முடிந்தும் பணம் கொடுக்காததால் பல்கலைகழக நிர்வாகத்தில் செல்வராஜ் பற்றி புகார் செய்துள்ளார் அன்வர்தீன்.புகாரின் பேரில் செல்வராஜை அழைத்து விசாரித்த தமிழ்துறை டீன் முத்துவீரப்பன் சோசியாலஜி டீன் செல்வராஜ். டீன் விஸ்வநாதன் ஆகியோர் மாணவனின் எதிர்காலத்தை வீணடித்து விட்டாயே என கண்டித்து 15 நாட்களுக்குள் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஆனால் இது வரை ஒரு பைசா கூட செல்வராஜிடமிருந்து  வரவில்லை. பல்கலைகழக நிர்வாக கட்டளையை ஏற்று நடக்காத செல்வராஜ் மீது பல்கலைகழகம் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இது சம்பந்தமாக பல்கலைகழக நிர்வாகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது சரியான பதில் இல்லை அதனால் மொத்த பல்கலைகழக நிர்வாகமும் இந்த அநியாய கொள்ளைகளுக்கு உடந்தையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

இதுபற்றி திருவாரூர் மாவட்ட வர்தக காங்கிரஸ் தலைவர் எவ.கருணாநிதி கூறுகையில்:

அன்வர்தீன் செல்வராஜிடம் பணத்தை ஒவ்வொரு தடவை கொடுத்தவுடன் செல்வராஜிக்கு போன் செய்து பணம் வாங்கி கொண்டாயா என கேட்பேன்.  ஒவ்வொரு தடவையும் நான் பாயிடம் பணம் வாங்கி கொண்டேன் எனவும் கடைசியாக இதுவரை 26 லட்சம் வாங்கி உள்ளேன் என என்னிடம் செல்வராஜ் போனில் கூறியுள்ளார். ஆனால் தற்போது பணத்தை நான் வாங்கவில்லை என் முன்னிலையில் கொலஞ்சியிடம் தான் பாய் பணம் கொடுத்தார் என பொய் சொல்கிறார் செல்வராஜ்.

பணத்தை இவர் வாங்க வில்லையென்றால் இவர் எதற்கு 6 லட்சத்தை திருப்பி கொடுத்தார். இதுபோன்று கொள்ளையடிக்கும் பேராசிரியர்களை பல்கலைகழகம் கண்டித்து இவர்களை நீக்க வேண்டும். இலவச கல்வி வழங்கிய காமராஜ் பிறந்த மண்ணில் கல்வி என்ற பெயரில் இதுபோன்ற அநியாய கொள்ளைகள், சூதாட்டங்கள் இப்பல்கலைகழ‌கத்தில் தொடருமானால் இக்கல்லூரியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் பெரும் போராட்டங்கள் நடத்துவோம் என கூறினார்.

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் திரு. ரவி கூறுகையில் :  

அன்வர்தீன் அவர்கள் செல்வராஜிடம் பணம் கொடுத்தது எனக்கும் தெரியும்,  சிறுபான்மை மாணவனான ஜாசிம் தன் கல்வியை எதிர்காலத்தை தொலைத்துவிட்டு நிற்கிறார்.

இதுபோன்று பல மாணவர்கள் இந்த அண்ணாமலை பல்கலைகழகத்தால் தங்கள் வாழ்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். இதுபோன்ற கொள்ளைகளை அரசு தலையிட்டு தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களின் புகார்களை இப்பல்கலைகழக நிர்வாகம் தீர விசாரித்து தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதுபோன்ற கல்வி கொள்ளைகளை  தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என கூறினார் .

பாதிக்கப்பட்ட மாணவர் சித்திக் ஜாசிம் கூறுகையில்:

நன்றாக  படித்து டாக்டர் ஆகி சேவை செய்ய வேண்டும் என்பது என்னுடைய  நீண்ட கால ஆசை.தற்போது என் வாழ்க்கை என்னாகுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது மனதளவில் மிகவும் பாதிக்கபட்டுளேன். தற்கொலையை இஸ்லாம் தடை செய்துள்ளதால் இன்று நான் உயிரோடு இருக்கிறேன்.

மாணவரணி மூலம் பல்வேறு கல்விக்கான உதவியை செய்துவரும்   TNTJ என்னுடைய இந்த விசயத்தில் தலையிட்டு என் பணத்தை மீட்டு தர வேண்டும் , என் போல் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  யாரும் பாதிக்கப் படாத வகையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார் .

கல்வியை சூதாட்டமாக்கி அதில் கொள்ளையடித்து ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாணவர்களின் இர‌த்தத்தை  உறிஞ்சி வரும்  பேராசிரியர்கள் என்ற போர்வையில் உள்ள புரோக்கர்களை பல்கலைகழ‌கம் கண்டித்து நடவடிக்கை எடுத்து வெளியேற்ற வேண்டும். இல்லையேல் இப்பல்கலைகழ‌கத்திற்க்கு பெருமளவில் கெட்ட பெயர் ஏற்பட்டு பெரும் பிரச்சனைகள் ஏற்படபோவது உறுதி.

இதுபோன்ற பிரச்சனைகள் காவல்நிலையத்திற்கு  வரும் போது பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகார்களுக்கு மதிப்பளித்து மாணவர்களின் வாழ்கையை நாசமாக்குபவர்கள் மீது  சட்டபடி நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற கொள்ளைகள் குறையும். ஆனால் பலகலைகழ‌கத்திற்கு ஆதரவான சில காவல் துறையினரால் இப்பிரச்சனைகள் வெளிவராமல் அமுக்கப் படுகின்றன.


TNTJ விடம் இந்த பிரச்சனை வந்துள்ளதால் அதுபற்றி கூறிய நிர்வாகிகள்:

இப்பல்கலைகழக துணை வேந்தரை சந்தித்து முறையிட உள்ளோம் , நல்ல முறையில் நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தரும் என பல்கலைகழக நிர்வாகத்தை நாங்கள் நம்புகிறோம், அப்படி பல்கலைகழகம் நடக்கவில்லை என்றால் மக்களை திரட்டி அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்துவோம் என கூறினர்.


களத்தொகுப்பு: D. முத்துராஜா

நன்றி: உணர்வு வார இதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...