Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 21, 2012

இந்தியாவில் முதன்முதலில் 4G ரிலீஸ் ...

பாரதி ஏர்டெல் கல்கத்தாவில் 4G ஐ வெளியிடுவதற்காக ZTE நிறுவனத்தை தேர்வுசெய்துள்ளது. பாரதிஏர்டெல்நிறுவனம்4G நெட்வொர்க் ஐ திட்டமிட்டு, வடிவமைத்து, சப்லைசெய்து, சந்தையில் நிறுத்துவதற்காக ZTE கார்பரேஷனை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் 4G சேவையை இந்தியாவில் முதன் முதலில் வெளியிடும் பெயரை ஏர்டெல் நிறுவனம் பெறவுள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிவேக கம்பியில்லா இணையதள சேவையை அனுபவிக்கவுள்ளனர். மேலும் இதன் மூலம் சிறந்த வீடியோ ஸ்ட்ரீமிங் - ஐயும், high definition video conferencing - ஐயும், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெறவுள்ளனர்.

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் CEO சஞ்சய்கபூர் கூறுகையில்: வெளிவர இருக்கும் இந்த 4G சேவையின் மூலம் அதிவேக தகவல் பரிமாற்றத்தை இந்த சமுதாயாத்திற்கு ஏர்டெல் நிறுவனம் அளிக்கவிருக்கிறது என்றும் இந்த 4G வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருப்பதாகவும் கூறினார். ZTE நிறுவனம் LTE தரத்தை பெறுவதற்காக இதுவரை 381 அத்தியாவசிய உரிமத்திற்கு விண்ணப்பித்துள்ளது. இது உலகிலுள்ள அனைத்து அத்தியாவசிய உரிம விண்ணப்பங்களிலும் தோரயமாக7 விழுக்காடுகளை பிடித்துள்ளது. ZTE நிறுவனம் இதுவரை LTE வணிகத்தில் 30 ஒப்பந்தங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...