Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 02, 2012

அமெரிக்க இராணுவத்தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்

ஆப்கானிஸ்தான்: கடந்த வெள்ளிக்கிழமை (30.03.2012) ஆப்கானிய கிழக்குப் பிராந்தியத்தின் மெஹ்டார் லாம் எனும் இடத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தலைமையிலான இராணுவத்தளம் மீது ஏவுகணைத் தக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் சர்வதேசப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அமெரிக்கப் படைவீரர்கள் இருவர், ஆப்கானிய மொழிபெயர்ப்பாளர்கள் மூவர் உட்பட மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். மேற்படித் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இதுவரை 12 ஆப்கானியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கத் தலைமையின்கீழ் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் நேட்டோ படையினருக்கு ஏற்பட்டுவரும் உயிரிழப்புவீதம் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதால், நேட்டோவில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள், ஆப்கானிய ஆக்கிரமிப்பு தொடர்பில் தம் நாட்டுப் பொதுமக்களின் அதிருப்தியையும் தொடர்ச்சியான அரசியல் அழுத்தங்களையும் எதிர்கொண்டுவரும் நிலையில் நேர்ந்துள்ள இந்தத் தாக்குதல் சம்பவம், நேட்டோ படைத் தரப்பில் பெரும் ஆத்திரத்தைக்
கிளப்பிவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் icasualties.org எனும் இணையதளம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வத் தரவுகளின் அடிப்படையில், அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படை 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் மீது மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பின் விளைவாக இதுவரை 2,940 நேட்டோ படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நேட்டோ படையினரின் இலக்குத் தவறிய தாக்குதல் நடவடிக்கைகளால் உள்ளூர் மக்களின் உயிரிழப்புகள் மற்றும் உடைமைச் சேதங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளமையும், அதனையிட்டு ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் அமெரிக்க எதிர்ப்பு அலை வலுவடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகள் at www.inneram.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...