Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 16, 2012

விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டம்

   இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரம் சோலை மகாலில் மாநில தலைவர் காதர் மைதீன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபு பக்கர், பொருளாளர் ஷாஜ கான், காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹ்மான் எம்.பி.மாநில துணைத்தலைவர் மௌலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் மாநில செயலாளர்கள் நெல்லை அப்துல்மஜித், காயல்மகபூப், கமுதி பஷீர், திருப்பூர் சத்தார், ஆம்பூர் பாசித், ஜீவகிரிதரன், ஆடுதுறை ஷாஜகான், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ், ஷேக்தாவூத், சுல்தான் மொய்தீன் உள்பட செயற்குழு உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட தலைவர், செய லாளர்கள் கலந்து கொண் டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஐக்கிய ஜமாஅத் பேரவை மேலாளர் சகாயராஜ், ஆலோசகர் ஷாகுல்அமீது, ஷாநவாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் காதர்மொய்தீன், நிருபர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறிய தாவது:- 3 மாநாடுகள் அகில இந்திய தலைவர் அகமது தலைமையில் 18-ந் தேதி சென்னை தலைமை அலுவலகத்தில் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் தேசிய அளவி லான இளைஞரணி மாநாடு நடக்க உள்ள தேதி, இடம் குறித்து நிர்ணயிக்கப்படும். வழக்கமாக கேரளாவில் தான் இந்த மாநாடு நடத்தப் படும். இப்போது முதல் முறையாக தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளது. இம்மாநாட்டிற்கு தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தது 200 பேர் வரை பங்கேற்க வேண்டும். மாநிலத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும். இதனை தொடர்ந்து சென்னையில் ஜுன் 30-ந் தேதி மாணவர் பேரவை
சார்பில் மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது.

அடுத்து முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில் மாநில மாநாடு நடத்தப்படும். இந்திய தேர்தல் ஆணையம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை அங்கீகரித்து ஏணி சின்னம் வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இனி எல்லா தேர்தல்களிலும் ஏணி சின்னத்தில் போட்டி யிடுவோம். ஹஜ் மானியம் நீடிக்க வேண்டும் புனித ஹஜ் பயணம் செல்வோருக்கு இந்திய அரசு வழங்கி வரும் மானியத்தை சில முஸ்லிம் அமைப்புகள் நிறுத்தக்கோரி இருப்பதாக வும் அதனை அரசு பரிசீலிக்கும் எனவும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கட்டண சலுகை யாக இந்த மானியம் வழங் கப்படுகிறது. ஹஜ் மானியம் தொடர்ந்து நீடிக்க வேண் டும். வரக்கூடிய 20-ந் தேதி முதல் சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்பட இருக் கிறது. கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு சலுகைகளை பெற யார் பெயரையும் விட்டு விடாம லும், முஸ்லிம் பெயர்கள் முழுமையாக எழுத்து பிழை இல்லாமல் கவனம் செலுத் தவும் அனைத்து மஹல்லா ஜமா அத்தினரையும் கேட்டுக் கொள்கிறோம்.

 தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகின்றனர். ஆகைய Öல் மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். இலங்கைக்கு இந்தியா எம்.பி.க்கள் குழு செல்கிறது. இந்த குழுவில் முஸ்லிம் எம்.பி.க்கள் இடம் பெறாதது வருத்தத்தை அளிக்கிறது. காரணம் இலங்கையில் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட இஸ்லாமியர்களும் அங்கு இருக்கிறார்கள் என்பதுதான். இந்தியாவில் நியாயமான தேர்தல் நடத்தவும் எல்லா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய வகை யில் தேர்தல் நடத்தவும் இந்த விகிதாச்சார அடிப்படை யிலான தேர்தல் முறை அமையும் என்று ஜனநாயக வல்லுனர்கள் தெரிவித் துள்ளனர். இதனை இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...