Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 23, 2012

ஆர் எஸ் எஸ் யின் பினாமி என்பதை நிருபித்தது அன்ன ஹசாரே குழு

கூட்ட நடவடிக்கையை செல்போனில் படம் பிடித்த முஸ்லிம் தலைவரை நீக்கியதால், எங்களுக்குள் பிளவு இல்லை என்று அன்னா ஹசாரே தெரிவித்தார். ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே குழுவின் உயர் நிலை கமிட்டி கூட்டம், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று நடந்தது. கூட்ட நடவடிக்கையை இக்குழுவில் இடம் பெற்றுள்ள தலைவரான முப்தி ஷமீம் காஸ்மி, தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் ஹசாரே குழுவில் இருந்து நீக்கப்பட்டார். இது பற்றி கருத்து தெரிவித்த காஸ்மி, எனக்கு செல்போனையே ஒழுங்காக இயக்க தெரியாது. அப்படி இருக்கையில் செல்போனில் எப்படி என்னால் படம் பிடிக்க முடியும். ஹசாரே குழு முஸ்லிம்களுக்கு எதிரான இயக்கமாக மாறிவிட்டது என்றார்.

 இந்நிலையில், அன்னா ஹசாரே இன்று டெல்லியில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எங்களிடையே பிளவு எதுவும் கிடையாது. நீங்கள் (மீடியாக்கள்) எந்த பிளவை பற்றி கேட்கிறீர்கள்? எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் (காஸ்மி) நேற்று நடந்த கூட்ட நடவடிக்கையை படம் பிடித்ததுடன், தகவல்களை கசிய விட்டுள்ளார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று குழுவைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் கேட்டுள்ளார். உடனே, அவர், உங்கள் குழுவில் இருந்து விலகுகிறேன். திரும்பி வர மாட்டேன் என்று கூறிவிட்டு, வெளியே சென்று விட்டார். இதை தவிர வேறு பிரச்சினை அங்கு நடக்க வில்லை. அவர் நீக்கப்பட்டதால் எங்களுக்குள் பிளவு எதுவும் ஏற்படவில்லை. கருத்து வேறுபாடுகள் தோன்றுமானால், அதை சரிசெய்ய போராடுவோமே தவிர வீழ்ந்து விட மாட்டோம். எங்கள் போராட்டத்தில் பாபா ராம்தேவ் கலந்து
கொள்வதால் எங்கள் குழுவில் கருத்து வேறு பாடுகள் தோன்றவில்லை.

 பலமான லோக்பால் மசோதா, கறுப்பு பண ஒழிப்பு போன்ற எங்களின் போராட்டங்களுக்கு அவர் ஏற்கனவே ஆதரவு அளித்து வருகிறார். ஊழலுக்கு எதிராக அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். ஊழலுக்கு எதிராக நான் மேற்கொள்ளும் சுற்றுப் பயணத்தில் எங்கெங்கெல்லாம் நாங்கள் (ஹசாரே, பாபா ராம்தேவ்) சந்திக்கிறோமோ, அங்கெல்லாம் மேடையை பகிர்ந்து கொள்வோம். அதே சமயம் ராம்தேவுடன் இணைந்து சுற்றுப் பயணம் செல்ல மாட்டேன். ஊழல் ஒழிப்பு விஷயத்திலும் இந்த நாட்டைப் பற்றிய கவலையிலும், நாங்களும், ராம்தேவும் ஒரே சிந்தனையையே கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...